கண்ணாடியை.. படுக்கை அறையில் வைக்கலாமா? பெட்ரூமில் "இந்த" பொருளை மட்டும் வெக்க கூடாது.. சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படுக்கை அறையில் கண்ணாடி வைக்கலாமா? அப்படியே வைப்பதாலும் எந்த திசையில் வைப்பது நல்லது என்று வாஸ்து குறிப்புகள் தெரிவித்துள்ளன.
பொதுவாக, வீடு கட்டும்போது, படுக்கையறையை வாஸ்துபடியே கட்டுவார்கள்.. அப்படி கட்டினால்தான் வீட்டில் செல்வம் தங்கியிருப்பதுடன், மனநிம்மதியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

படுக்கையறை: அந்தவகையில், படுக்கையைறையை தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் கட்ட சொல்கிறார்கள்.. வட கிழக்கு திசையில், தென்கிழக்கு திசையிலும் படுக்கையறை இருக்கவே கூடாது.

Which is the Best direction to keep mirror at the Bedroom and vastu tips for mirror in the bedroom

படுக்கையறை கதவுகள், கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும்படியும், படுக்கையறை ஜன்னல் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும்படியும் பார்த்து கொள்ள வேண்டும்.. அதேபோல, மரத்தினால் செய்யப்பட்ட படுக்கையே சிறந்தததாம்.. அதுவும், செவ்வகம் அல்லது சதுர வடிவில் மட்டுமே இந்த படுக்கை இருக்க வேண்டும்.

நேர்மறை ஆற்றல்: படுக்கையறை சுவரின் நிறத்தில்கூட கவனம் செலுத்த வேண்டுமாம்.. நீலம், பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் சுவர்கள் இருந்தால், படுக்கையறையில் நேர்மறை ஆற்றலை வழங்கும் என்கிறார்கள். தூங்கும்போது தலையை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே படுக்க வேண்டும்.. வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால், மன அழுத்தம் அதிகரிக்குமாம்.

அதேபோல, படுக்கையறையில் கண்ணாடிகளை வைக்கலாமா? வைக்கக்கூடாதா? என்ற குழப்பமும் நிலவுவதுண்டு.. எப்போதுமே கண்ணாடி வாங்குவதாக இருந்தால், சூரியன் மறைவதற்குள் வாங்க வேண்டுமாம்.. அடிக்கடி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

கண்ணாடிகள்: படுக்கைகள் எப்படி செவ்வக, சதுர வடிவில் இருக்க வேண்டுமோ அதுபோலவே, கண்ணாடிகளும் இருக்க வேண்டுமாம். பிற வடிவங்களில் கண்ணாடி இருந்தால், ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் ஏற்படலாம்.

படுக்கைக்கு முன்பு கண்ணாடி இருக்கவே கூடாதாம்.. இதனால், வீட்டில் நன்மைகள் நடப்பது குறைந்துவிடுமாம்.. படுக்கையை பார்த்தவாறு கண்ணாடி இருக்கக்கூடாதாம். கண்ணாடியின் பிரதிபலிப்பு படுக்கையில் விழாதவாறு, கண்ணாடியை துணியால் மூடிவைக்க சொல்கிறார்கள். தூங்கும்போது, படுக்கையறை கண்ணாடியை மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் எடுத்துவிடலாம்.

வடகிழக்கு திசை: ஒருவேளை படுக்கையறையில் கண்ணாடி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், வடகிழக்கு மற்றும் வடக்கு திசையில் வைக்க சொல்கிறார்கள். காரணம், இந்த 2 திசைகளிலும் கண்ணாடியை வைப்பது குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கிறதாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கிழக்கு திசையில் மட்டும் கண்ணாடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

டிரஸ்ஸிங் டேபிளாக இருந்தால், அதனை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி வைக்காமல் இருந்தாலே போதுமாம்.. அல்லது தனி கண்ணாடியாக இருந்தால், அது அதேபோல 2 கண்ணாடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து இருந்தால், குடும்பத்தில், மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல் ஏற்படுமாம்.. பெரும்பாலும் 2 கண்ணாடிகளையும் ஒரே அறையில் வைப்பதை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+