வாரந்தோறும் எண்ணெய் குளியல் அவசியமா.. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது"இதை" மட்டும் செய்துடாதீங்க
சென்னை: நல்லெண்ணெய் குளியல் செய்வதன் பலன்கள் என்னென்ன? எந்த கிழமைகளில், எண்ணெய் குளியல் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எண்ணை குளியலுக்கு சரியான நேரம் எது? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்..!
உடல் சூடு, வறண்ட தோல் உள்ளவர்கள் கட்டாயம் தேய்த்து குளிக்க வேண்டும்.. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, சருமத்திலும், சரும துவாரங்களிலும் அழுக்குகள் வெளியேறும்.. வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை நெருங்காது. சருமம் மினுமினுப்பாகும்.

எண்ணெய் குளியல் நல்ல தூக்கத்தை தரும்.. தலைமுடியும் உறுதி பெறும்.. உடல் வலியும் நீங்கும். மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களுக்கும், எண்ணெய் குளியல் மிகவும் நல்லது. நம்மை பிடித்த தோஷங்களும் விலகிவிடும்.
பலன்கள் : சனி பகவானுக்கு உரிய தானியம் எள் என்பதால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யே தலைக்கு தேய்க்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகுகிறது, சனியினால் ஏற்படும் எலும்பு நோய்கள், வாதம் போன்றவை நீங்குகிறம்... புதனால் ஏற்படும் நரம்பு நோய்களும், சரும நோய்கள் நீங்குகின்றன.
உடல் உஷ்ணத்தை தரக்கூடிய சூரியன் மற்றும் செவ்வாயால் உண்டாகக்கூடிய சூடு சார்ந்த கோளாறுகளும் நீங்குகின்றன
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து தலைமுதல் கால் வரை ஊறவைத்து ம் குளிக்கலாம்.
எப்போது குளிக்கலாம்: காலையில் எண்ணெய் தேய்ப்பதுதான் மிகவும் நல்லது ஏனென்றால், சூரியனிலிருந்து வரும் வைட்டமின் D சத்துக்கள் நமக்கு மிகவும் நல்லது.. காலை 8 மணிக்கு முன்பு, அல்லது மாலை 5 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
முடக்கு வாதம்: ஆண்கள் புதன், சனிக்கிழமைகளில் குளிக்கலாம்.. ஏனென்றால், ஆண்கள் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வருமாம். அதேபோல செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முதுகெலும்பு பிரச்சினைகள், மாலைக் கண் நோய்களும், வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சலும் ஏற்படுமாம்.
பெண்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன்கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டால், கல்வி வளரும். புத்திக்கூர்மை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்வதால் புகழ் உண்டாகும். செல்வம் அதிகரிக்கும்.
ஆனால், செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமையில் எண்ணெய் குளியல் செய்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள்..
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடுமாம். சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால், சகல சம்பத்து உண்டாகும்.. திங்கட்கிழமை எண்ணெய் குளியல் செய்தால் அதிகம் பொருள் சேரும் என்பார்கள்.
தவறுகள்: தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டிருக்கும்போது, பெண்கள் விளக்கேற்றி வழிபட கூடாது. வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.. தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது.
பெண்கள், தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் வீட்டை விட்டு பயணிக்க கூடாது.. எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டால் அன்றைய தினம் வெளியில் அலையக்கூடாது. இதனால், உடலில், இன்னும் உஷ்ணம் சேர்ந்துவிடும் என்பார்கள்.












Click it and Unblock the Notifications