எந்த ராசிக்காரர்கள் சிவப்பு கயிறுகளை கட்டலாம்? எதற்காக கட்ட வேண்டும்?
சென்னை: எந்த ராசிக்காரர்களுக்கு சிவப்பு கயிறு கட்டினால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது தெரியுமா? அது போல் யாரெல்லாம் கட்டக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க இது போன்ற நம்பிக்கைகளை சிலர் மேற்கொண்டிருக்கிறார்கள்.
வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இதை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் உள்ளன. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் சிவப்பு கயிறு கட்டுதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நற்செயலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான காரணம் ஆகும். அது போக சாஸ்திரங்களின்படி சிவப்பு கயிறு கட்டுவது தெய்வங்களின் ஆசிர்வாதத்தை தருகிறது.
இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சிலருக்கு சிகப்பு கயிறு கட்டுவது என்பது தீங்கை விளைவிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் எந்த ராசியினர் சிவப்பு நிற கயிறு கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிற்றை ஒரு போதும் கட்டவே கூடாது.
அதற்கு பதிலாக அவர்கள் மஞ்சள் அல்லது ஆரஞ்ச் நிறம் அல்லது கருப்பு கயிறுகளை கட்டலாம். பூஜையிலும் கருப்பை தவிர மற்ற கயிறுகளை பயன்படுத்தலாம். சனி பகவனால் சில ராசிக்காரர்கள் சிவப்பு கயிறு கட்டக் கூடாது. ஏனென்றால் மீனம், கும்ப ராசிக்கு அதிபதியே சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கையிலோ கழுத்திலோ சிவப்பு கயிறு கட்டினால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவார்கள்.
அது போல் மகர ராசிக்காரர்களும் சிவப்பு கயிறை கட்டக் கூடாது. இவர்கள் கட்டினால் வாழ்க்கையில் சிக்கல்கள் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அது போல் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு கட்டினால் அது நன்மையை தரும். அவர்கள் எதிர்மறை ஆற்றல் மறைந்து போகும். வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அது போல் ரிஷப ராசிக்காரர்கள் மஞ்சள் நிற கயிற்றை அணிந்தால் நன்மைகள் கிடைக்கும். அது போல் மிதுன ராசிக்காரர்கள் பச்சை நிறத்தில் கயிற்றை அணிந்து கொள்வது நல்லது. அது போல் கடக ராசிக்காரர்களும் மஞ்சள் நிற கயிற்றைகட்டினால் சுபகாரிய தடைகள் விலகும். சிம்ம ராசிக்காரர்கள் ஆஞ்சநேயருக்கு உகந்த செந்தூர நிறக் கயிற்றை அணியலாம்.
-
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications