என்னோட ராசி நல்ல ராசினு பாடணுமா? எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் நன்மை தெரியுமா?
சென்னை: எந்த ராசிக்காரர்கள் என்னென்ன தெய்வங்களை வழிபடலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். தெய்வத்தை மனதார அழைத்தால் அவை நம்முடனேயே வந்து நமது கஷ்டங்ளை எல்லாம் தீர்த்து வைக்கும்.
மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகளும் அதில் 27 நட்சத்திரங்கள் என உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பது போன்று, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திர அதிபதிகளும் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்குண்டான தெய்வங்களை வணங்கினால் வாழ்க்கை நலமும் வளமும் பெறும்.

விதியை மதியால் வெல்ல முடியாது என்பதை நினைத்து கொண்டு இறைவனை வழிபடாமல் அய்யோ குத்துதே குடையுதே என சொல்லக் கூடாது. எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வங்களை வணங்கலாம் என்பதை பார்க்கலாம்.
ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 11ஆம் இடம் எந்த ராசியோ அந்த ராசிக்கு உரிய தெய்வம்தான் உபாசனா தெய்வம். அதே போல பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து 11ஆம் வீடு எந்த ராசிக்கு வருகிறதோ அந்த ராசிக்கு உரிய தெய்வத்தை வழிபடலாம். உபாசனா தெய்வம் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரும்.
மேஷ ராசிக்காரர்கள் அனுமனை வழிபட வேண்டும் என்கிறார்கள். அது போல் ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை வழிபட்டால் நலம். மிதுன ராசிக்காரர்கள் விநாயக பெருமானை வழிபட வேண்டும். கடக ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட வேண்டும்.
சிம்ம ராசிக்காரர்கள் விநாயகரையும் ராதாவையும் வழிபடுவது நன்மையை கொடுக்கும். கன்னி ராசிக்காரர்கள் சிவபெருமானையும் ராதாதேவியையும் வழிபட்டால் நல்ல பலனை கொடுக்கும். அது போல் துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ணரை வணங்க வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் காயத்ரி தேவியை வழிபட வேண்டும். மகர ராசிக்காரர்கள் ஸ்ரீராமரை வழிபட வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் துர்க்கையை வழிபடலாம். மீன ராசிக்காரர்கள் கவுரி தேவியையும் விஷ்ணுவையும் வழிபட வேண்டும். இது எல்லாவற்றையும் விட குலதெய்வத்தை வழிபட்டால் மற்ற தெய்வங்களும் கூடவே வரும் என்பார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications