Aani: ஆனி மாதத்தில் 32 நாட்கள் ஏன்? ஆனியில் வீடு கட்ட கூடாதாமே! பின்னணி என்ன?
சென்னை: ஆனி மாதத்தில் ஏன் 32 நாட்கள் இருக்கிறது தெரியுமா? அது போல் ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கவும் கூடாது, வேறு வீட்டிற்கு குடி பெயரவும் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: ஆனி மாதத்தில் 32 நாட்கள் வருவது ஏன்? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. பங்குனி மாதம் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என ஒவ்வொரு மாதமும் 30, 31 நாட்கள் கொண்டு முடியும். ஆனி மாதம் 32 நாட்களை கொண்டுள்ளது. அது ஏன்? என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
ஆனி மாதம்
சூரியனின் வடதிசை பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினை கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும்.
ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்டா மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.
ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதி பகுதி. தேவர்களின் மாலை நேர பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாத காலமாகும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன.
ஆனியில் 32 நாட்கள்
தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்கு காரணம்.
இதன் காரணமாகவே இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.
வீடு கிரகப்பிரவேசம் ஏன் ஆனி மாதத்தில் வைக்கக் கூடாது? ஆனி அடி போட்டாலும் கூனிக் குடியேறாதே! என்ற பழமொழிக்கேறப ஆனி மாதத்தில் அடி போடுவதும், பங்குனி மாதத்தில் குடியேறுவது கூடாது என்று கூறுகிறார்கள்.
ஆகையால் ஆனி மாதத்தில் வீடு கட்டத் தொடங்கக் கூடாது, புதுவீடு குடியேறவும் கூடாது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை ஆனி மாதத்தில் இழந்ததால் இம்மாதத்தில் கிரகபிரவேசம் அல்லது புது வீடு குடி பெயர்ந்தால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications