இயேசு மரித்த நாளை, புனித வெள்ளி என்று ஏன் அழைக்கிறோம்? புனித வெள்ளியின் நற்செய்தி என்ன தெரியுமா?
சென்னை: புனித வெள்ளி என்பது ஒரு மிக முக்கியமான நாளாகும், உலக சரித்திரத்தை மாற்றின ஒரு நிகழ்வு எருசலேமிலே நடைபெற்றது. இந்த நாளை புனித வெள்ளி, அல்லது நல்ல வெள்ளி, மேலும் ஒரு சிலர் இதை துக்க நாளாக பார்க்கின்றனர். பொதுவாக நாம் எல்லோரும் இந்த நாளில் மிக சந்தோசமாக இருக்க வேண்டிய நாள், ஏனென்றால் நாம் செய்த பாவங்களுக்காக, நாம் மேல் விழவேண்டிய தண்டனைகள், சாபங்கள், எல்லாவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய கைகளிலும், கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டவராய், ரத்தம் வடிய வடிய தொங்கி மரிக்க, தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் தன்னை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தினாலே, அவருடைய ரத்தத்தினாலே நம்முடைய எல்லா நோய்கள், பாவ சாபங்களையெல்லாம் கழுவி, இன்று நாம் அவருக்குள் நீதிமான்களாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எனவே இந்த நாளை நினைவுகூறும்படியாக தான், உலகமெங்கும் புனித வெள்ளி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியின் நற்செய்தி என்ன: சிலுவையின் மரணம் என்பது தோல்வியின் அடையாளம் அல்ல, அது வெற்றியின் அடையாளம் என்பதை (கொலேசியார் 2:13-15) வசனத்தில் வேதம் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. "உங்கள் பாவங்களினாலேயும், மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார். இயேசு சிலுவையில் மரித்ததற்கு முக்கியமான நோக்கம், நம்மை அவருக்குள் பூரணப்படுத்துவதற்கே, இதை எபிரெயர் 10:14 வசனத்தில், " ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்னென்றைக்கு பூரணப்படுத்தியிருக்கிறார்" ஆங்கில வேதாகமத்தில் (He Has Perfected Forever) என்று சொல்லப்பட்டுயிருக்கிறது. அவர் தம்மை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தினாலே, ஒரே பலியினாலே நம் எல்லோரையும் பூரணப்படுத்தியிருக்கிறார் என்பதே மிக சிறப்பான நற்செய்தியாகும்.

சிலுவையின் மேன்மை: இயேசு கிறிஸ்துவை நேசிக்கும் ஒரு உண்மையான விசுவாசி, இந்த நாளில் மட்டும் இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டு, காயப்பட்டு, பட்ட பாடுகளை தியானம் செய்யாமல், ஒவ்வொரு நாளும் அவருடைய பாடுகளை தியானித்து வேண்டும் (ரோமர் 5:8 வசனத்தில்) நாம் பாவிகளாயிருக்கையில், நாம் மரிக்க வேண்டிய இடத்தில், அவர் நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
சிலுவையில் தேவ சித்தம் நிறைவேறியது: பிதாவினுடைய திட்டத்தை கல்வாரி சிலுவையில் தன்னுடைய குமாரன் மூலமாய் நிறைவேற்றினர். இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் சாத்தானுக்கும், கூட்டாளிகளுக்கும், பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், ரோமன் கவர்னர் மற்றும் ரோமானிய வீரர்களுக்கும் புரியாத புதிராக இருந்தது. ஆனால் அவரை விசுவாசிப்பவர்களுக்கும், தேவ திருச்சபைகளுக்கும், இயேசுவின் நொறுக்கப்பட்ட சரீரத்தில் ஒரு தெய்வீக சுகம் மற்றும் சிந்தப்பட்ட இரத்தத்தில் பாவ மன்னிப்பு மற்றும் நித்திய ஜீவன் உண்டு எனபதை நன்கு அறிந்திருக்கிறது. இந்த நாளை நினைவு கூர்ந்து, நம்முடைய பாவ சாபங்களிலிருந்து விடுதலையாக்கி, நோய்களிலிருந்து விடுவித்து, சுகம் தந்து, நம் எல்லோரையும் பூரணப்படுத்தியிருக்கிறார் என்று விசுவாசிப்போமாக, ஆமென்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications