ராசிதான் கை ராசிதான்.. வெள்ளிக்கிழமை கல் உப்பில் கை வைத்தால் இத்தனை மகிமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல் உப்பு சாதாரணமானதல்ல.. சக்தி வாய்ந்தது. மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் கல் உப்பு வாங்கிப்பாருங்கள்.. நீங்களே ஆச்சரியமடையும் அளவிற்கு வருமானம் குவியும். செல்வ வளம் அதிகரிக்கும்.

பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ஆனவர் இந்த ஒரு பொருளில் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார். அது நாம் அனைவரம் பயன்படுத்தும் கல் உப்புதான்.

முந்தைய காலங்களில் எல்லாம் தமிழர்கள் அனைவரின் வீட்டிலும் உப்பிற்கு என தனி மரியாதை கொடுக்கப்பட்டது
திருமணமாகி முதன் முதலாக புகுந்த வீடு செல்லும் மணப்பெண் முதன் முதலாக கை வைப்பது கல் உப்பில்தான். ஏன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கல் உப்பின் மகிமையை பார்க்கலாம்.

கல் உப்பு

கல் உப்பு

உப்புதான் எடுக்க எடுக்க வளர்ந்து கொண்டே வரும். கடலில் உள்ள கல் உப்பு தீரவே தீராது. அது போல நம்முடைய வீட்டில் உள்ள செல்வமும் நாளுக்கு நாள் வளர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். சுபிட்சம் பொங்க வேண்டும் என்பதற்காகவே நம்முடைய வீட்டிற்கு வரும் மருமகளை கல் உப்பில் கல் வைக்கச் சொல்கிறார்கள்.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

நீங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பணப் பை போன்றவற்றில் சில கல் உப்பு போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும். தங்கம் வாங்கிய உடன் கல் உப்பு ஜாடியில் போட்டு எடுத்து அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும்.
வீட்டில் திருஷ்டி சுற்றும் போது கல் உப்பை பயன்படுத்துவார்கள். கோவில்களில் உப்பு வாங்கி கொட்டுவார்கள்.
கடலில் குளிப்பது. கடல் தண்ணீரை தலையில் தெளிப்பது என கல் உப்பை பல வழிகளில் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் நம்முடைய உடம்பில் நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

நேர்மறை சக்தி கூடும்

நேர்மறை சக்தி கூடும்

கல் உப்புக்கு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் சக்தி உண்டு. எனவேதான் கல் உப்பை கையில் வைத்து நாம் ஒரு காரியத்தை நினைத்து மந்திரம் போல உச்சரித்தால் அது நிச்சயம் நடைபெறும். நம்முடைய உடம்பில் நேர்மறை சக்தி அதிகமாக வேண்டும் என்றால் கை பிடி கல் உப்பை எடுத்து குளிக்கும் வாளியில் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி தலையில் இருந்து கால்வரை நனையும் வகையில் குளிக்க வேண்டும்.

செல்வம் தரும் கல் உப்பு

செல்வம் தரும் கல் உப்பு

கல் உப்பை மட்டும் யாருக்கும் தானமாகவோ, ஓசியாகவோ கொடுக்காதீர்கள். நம்முடைய செல்வம் நம்மை விட்டு போய் விடும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதே நேரத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது நாம் அந்த வீட்டிற்கு கல் உப்பும், மஞ்சளும் கொண்டு சென்றால் நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்கும்

வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்கும்

கல் உப்பை ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் ஓடி விடும். வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்கும். கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் கல் உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும். படுக்கை அறையில் கல் உப்பை கை படாத இடத்தில் வைத்தால் கணவன் மனைவி சண்டை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

சக்தி அதிகரிக்கும்

சக்தி அதிகரிக்கும்

நம்முடைய வீட்டினை கழுவி சுத்தம் செய்யும் நிறைய கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக கல் உப்பை கரைத்து வீடு துடைத்தால் எதிர்மறை சக்திகள் அகன்று நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வாகனங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாரா விபத்துகள் ஏற்படாது.

சமையல் அறையில் உப்பு

சமையல் அறையில் உப்பு

வீட்டின் சமையல் அறையில் கல் உப்பை பெரிய மண் பானையிலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ போட்டு வைக்க வேண்டும். நிறைந்த அந்த பானையில் இருந்து கல் உப்பை கைகளால் எடுத்து சமைக்க குறைவில்லாத செல்வம் உண்டாகும். உணவுக்கு என்றைக்கும் குறையிருக்காது. செல்வ செழிப்பு உண்டாகும்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

அதே போல வெள்ளிக்கிழமையன்று பசு கோமியத்தை சிறிதளவு வீட்டில் தெளித்து வாருங்கள். அது மட்டும் அல்லாமல் நீங்கள் குளிக்கும் பொழுதும் கொஞ்சம் பசுவின் கோமியத்தை சேர்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்ய உங்கள் உடம்பில் உள்ள எதிர்மறை சக்தியும் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியும் தலைதெறிக்க ஓடிவிடும். இதனால் மகாலட்சுமி இல்லம் தேடி வரும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+