"ஆடியில கட்டி கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்! அட ஆகாது ஆகாது மச்சானே!" தம்பதிகளை பிரிப்பது ஏன்?
சென்னை: ஆடி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்றும் திருமணமான தம்பதிகள் ஒன்று சேரக் கூடாது என கூறுகிறார்களே! இப்படி புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆடி மாதம் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக் கூடாது?
இந்த ஆடி மாதம் என்பது அம்மனுக்கும் குலத்தெய்வத்திற்கும் உகந்த மாதம். ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டும். இறை வழிபாட்டுக்காகவே இந்த மாதம் ஒதுக்கப்பட்டதால் ஆடி மாதத்தில் திருமணங்களை நடத்துவதில்லை.

ஆடி மாதத்தில் மழையும் காற்றும் இருக்கும். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விவசாய பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயத்திற்காக அதிக செலவு செய்யப்படும் என்பதால் திருமணம் செய்ய பணமிருக்காது என்பதற்காக ஆடியில் திருமணங்களை நடத்தாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அது போல் கணவனின் நலனே தன்னலன் என மனைவியும் மனைவியின் துணையே தன் பலம் என கணவனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை, அது போல் திருமணங்களும் நடத்துவதில்லை. இந்த மாதம் புதுமணத் தம்பதியை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக் கூடாது என்பதற்காக அல்ல.
அவர்கள் இருவரும் காலமெல்லாம் பிரியாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு கணவனை இணை பிரியாமல் இருப்பதற்கான பூஜை, புனஸ்காரங்களையும் அம்பிகை வழிபாட்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே புதுமணத் தம்பதியை பிரிக்கிறார்கள். இதனால்தான் ஆடி சீர் வைத்து பெண்ணை பிறந்த வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.
அது போல் ஆடியில் திருமணம் செய்து கொண்டால் சித்திரை மாதம் பிள்ளை வரும் என்பது தெரிந்தது. ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொண்டு அந்த மாதத்தில் புதுமண தம்பதியர் ஒன்று சேர்ந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். இந்த குழந்தை வீட்டிற்கு ஆகாது, தந்தைக்கு ஆகாது என்றெல்லாம் மூடநம்பிக்கை இருக்கிறது.
ஆனால் முக்கியமான காரணம் என்ன என்றால், ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை சித்திரை மாதம் இருக்கும். அப்போது கத்தரி வெயிலும் இருக்கும். அந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிறிய குழந்தை கத்தரி வெயிலால் அவதிப்படும் என்பதால்தான் தம்பதியை பிரித்து வைத்தார்கள்.
சித்திரை மாதத்தில் பிரசவித்த தாய்க்கும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். இதனால்தான் ஆடியில் திருமணம் செய்தால் சித்திரையில் பிள்ளை வரும் என்பதால் ஆடியில் திருமணங்களை முன்னோர்கள் தவிர்த்தனர். மற்றபடி சித்திரையில் பிள்ளை பிறந்தால் வீட்டிற்கு ஆகாது என சொல்வது எல்லாம் மூடநம்பிக்கை கதைகளாகும்.
அது போல் ஆடி மாதத்தில் புது வீடு கட்டி கிரகபிரவேசம் செய்யக் கூடாது என்றும் கூறுகிறார்கள். கிரகபிரவேசம் செய்ய விரும்பினால் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பிறகு இந்த காரியத்தை செய்யலாம் என்கிறார்கள். ஆனால் ஆடி மாதத்தில் நிலமோ வீடோ வாங்கலாம். ஆடி மாதத்தில் வாடகை வீட்டிற்கு பால் காய்ச்சலாம். ஆடி மாதத்தில் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் இருப்பதால் வீட்டில் சுபவிசேஷங்கள் வைத்தால் அது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் திருமணம், கிரகபிரவேசம் உள்ளிட்டவைகளை தவிர்த்தனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications