அறுபடை வீடுகளில் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது! ஏன் தெரியுமா?
சென்னை: சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது அனைத்து முருகன் கோயில்களிலும் நடக்கும் போது திருத்தணி கோயிலில் மட்டும் நடப்பதில்லையே ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கந்த சஷ்டி விரதமானது கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இது முருகர் திருக்கல்யாணத்துடன் வரும் 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த 7 நாட்களும் முருகனுக்காக விரதத்தை பக்தர்கள் தொடங்கிவிட்டனர்.

மேலும் பலர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கி விரதத்தை தொடங்கியுள்ளனர். அங்கு இவர்கள் தங்குவதற்காக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐப்பசி மாதம் சதுர்த்தி அமாவாசை திதியில் தீபாவளிக்கு பிறகு வரக் கூடிய 6 நாட்களும் கந்த சஷ்டி பெருவிழாவாகும்.
இந்த நாட்களில் முருகனை எண்ணி வழிபட்டால் நம் கோரிக்கைகள் , வேண்டுதல்கள் நிறைவேறும். இந்த கந்த சஷ்டி விரத நாளில் முருகனின் பாடல்களை பாடி முருகனை தொழுவது வழக்கம். சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் முருக பக்தர்கள் உணவு, நீர் இன்றி மிக தீவிரமாக விரதமிருந்து அன்று மாலை நிகழும் சூரசம்ஹார நிகழ்வை கண்டு களிப்பர்.
அப்போது பக்தர்களின் துன்பங்கள் நீங்கி மன உறுதி கிடைக்கும். மறுநாள் முருகன் தெய்வானை திருமண நிகழ்வை கண் குளிர பார்க்கும் பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிப்பர். இந்த கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளிலும் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் முருகனின் திருத்தணியில் இருக்கும் 5ஆம் படைவீட்டில் மட்டும் இந்த விழா நடைபெறாமல் அமைதியாக இருக்கும் ஏன் தெரியுமா? முருகன் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம் திருத்தணி. தணிகை என்றாலே கோபம் தணிதல் என்று அர்த்தம்.
திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகிறார். இதனால் இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவது இல்லை. இருந்தாலும் கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. அது போல் வள்ளித் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை கண் குளிர பார்த்தால் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications