கார்த்திகை மாதத்தை கூட விடுங்க! புரட்டாசியில் அசைவம் சாப்பிட கூடாது ஏன் தெரியுமா? புதன் இருக்காருல்ல
சென்னை: புரட்டாசி மாதங்களில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது தெரியுமா? பெருமாளுக்கு விரதம் என்பதை தாண்டி இதில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புரட்டாசி மாதம் என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான மாதமாகும். இந்த மாதம் பெருமாளுக்கு விசேஷம் என்பதால் இந்த மாதம் நமக்கு ஸ்பெஷலாகும். புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அது போல் சிலர் கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதம் என்பதால் அந்த மாதமும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். கடவுளான விரதமாக நமக்கு பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருந்தாலும் சிறியவர்களுக்கு அது குறித்து புரியாது. ஏன் எதற்கு எப்படி எப்போது என கேள்விகளை கேட்டு பழகிவிட்டார்கள். அதுதான் நல்லதும் கூட!
சரி ஏன் புரட்டாசி மாதம் இறைச்சிகளை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக புரட்டாசி மாதத்தின் போது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பெய்யும் போது அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.
இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். பொதுவாக வெயில் காலத்தில் வெப்பமான காலநிலையை விட மழை காலம் என்பது மோசமான விளைவுகளை தரும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரித்து உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.
தோல் சூடாவதோடு உலர்ந்து போகும், அதிகமாக வியர்க்கும். உடலின் வெப்பநிலை 105 பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும். இதய துடிப்பு அதிகரித்து மூச்சு வாங்கும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தித் தரும். ஜோதிடத்தில் 6ஆவது ராசியாக உள்ளது கன்னி. இந்த ராசிக்கு அதிபதி புதன் பகவான். மேலும் புதன், மகாவிஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் பெருமாளுக்கு உரிய கிரகமாகவும் பார்க்கப்படுகிறது.
புதன் சைவப்பிரியர். அதனால் கன்னி ராசிக்கான மாதமான புரட்டாசியில் அசைவ உணவுகளை எடுக்காமல் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications