சிவனை தென்னாடுடைய சிவன் என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?
சென்னை: சிவப்பெருமானை தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் ஆதிரையான் என்றும் ஏன் அழைக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் முக்தி அளிக்கும் சிவஸ்தலங்கள் குறித்து பார்க்கலாம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: முக்தி தலங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. பிறக்க முக்தியளிப்பது
திருவாரூர்
2. வாழ முக்தியளிப்பது
காஞ்சிபுரம்
3. இறக்க முக்தியளிப்பது
வாரணாசி (காசி)
4. தரிசிக்க முக்தியளிப்பது
தில்லை (சிதம்பரம்)
5. சொல்ல முக்தியளிப்பது
திருஆலவாய் (மதுரை)
6. கேட்க முக்தியளிப்பது
அவிநாசி
7. நினைக்க முக்தியளிப்பது
திருவண்ணாமலை
மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.
இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.
இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு. ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று. இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும். ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.
மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வரலாம். அர்ச்சனை செய்யலாம். அன்னதானம் செய்யலாம். சிவத்தலத்தில் மந்திரம் ஜெபிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications