மஞ்சள் நிறத்தில் கடலைப்பருப்பு, பசு நெய்யின் மகிமை இதுதான்.. விஷ்ணுவை வியாழக்கிழமை ஏன் வணங்கணும்?
சென்னை: மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். வியாழக்கிழமை விஷ்ணு பகவானுக்கும், குருபகவானுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.. வியாழக்கிழமையை குருவாரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. வியாழக்கிழமை என்பது கடவுள் விஷ்ணு, பிரகஸ்பதி, குருபகவான் ஆகியோரை வழிபடுவதற்கான சிறப்பு தினமாகவே கருதப்படுவதுடன், இந்நாள் ரிகஸ்பதிவார் என்றும் அழைக்கப்படுகிறது.. இந்த நாளில் விஷ்ணுவை வணங்க காரணங்கள் என்னென்ன? பலன்கள் என்னென்ன? தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
புரட்டாசி மாதமும் மார்கழி மாதமும் தான் மாதங்களிலேயே புனிதத்துக்கு உரியவையாக கருதப்படுவதால், இந்த 2 மாதங்களிலும் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய கடவுளாகப் போற்றப்படுகிறார்... குறிப்பாக மார்கழி மாதம் மோட்சத்துக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.

வியாழக்கிழமை விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் பல்வேறு பலன்களை பெறுலாம்.. குறிப்பாக, ஒருவரி புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், தொழில்திறன் அதிகரிக்கும் என்பார்கள். செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் கிடைக்கும்.. மேற்கண்ட பலனை பெற 16 வியாழக்கிழமைகள் விரதம் கடைப்பிடிக்கலாம்..
16 வியாழக்கிழமை விரதம்
இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டுமானால், , காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடிக்க வேண்டும்.. வழிபாட்டுத் தலத்தை சுத்தம் செய்து, ஒரு துணியை விரித்து வழிபாட்டுப் பொருட்களை வைக்க வேண்டும்.
பிறகு விஷ்ணுவை மனதார தியானித்து, விரதம் இருக்க சபதம் எடுக்க வேண்டும்.. பின்னர் வாழை மரத்தின் வேரில் பருப்பு, வெல்லம், திராட்சையை வழங்கி விஷ்ணுவை வணங்க வேண்டும.. இறுதியில், ஆரத்தியின் நீரை குடிக்க வேண்டும்..
விஷ்ணுவை வியாழக்கிழமைகளில் வணங்கும்போது, மஞ்சள் நிறம் உகந்த ஆடையாக கருதப்படுகிறது.. அன்றையதினம் விஷ்ணுவுக்கும் பிரகஸ்பதிக்கும் மஞ்சள் நிற மலர்களை கொண்டு பூஜைகள் செய்யலாம்.. மஞ்சள் நிற பழங்கள், மலர்களை தானமாக தரலாம்.
நெய்யும் கடலை பருப்பும்
வியாழக்கிழமை நாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருந்து ஒரே ஒருமுறை மட்டும் நெய்யுடன் கடலைப்பருப்பு சேர்த்து உணவாக உட்கொள்ள வேண்டும்.. அதாவது மஞ்சள் நிற உணவையே உண்ண வேண்டும் என்பதற்காகவே இந்த கடலைப்பருப்பும் நெய்யும் அன்றைய நாளில் தேர்வு செய்யப்படுகிறதாம். சிலர் வாழைப்பழமும் சிலர் சிறிய வாழைக்கன்றையும் வைத்து வழிபாடு செய்வார்கள்..
அதேசமயம், மஞ்சள் நிற உணவுப் பொருட்களான வாழைப்பழம், கடலை மாவு லட்டு, கடலை பருப்பு, வெல்லம், மஞ்சள் லட்டு போன்றவற்றை வியாழக்கிழமை சாப்பிடக்கூடாது. அன்றைய நாளில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானம் செய்வதும் புண்ணியத்தைத் தரும்..
அதுமட்டுமல்ல, விஷ்ணு பகவானை உண்மையாக நினைத்து வழிபடுகிற பக்தர்களுக்கு வியாழக்கிழமைகளில்தான் காட்சி தருவாராம். அதேசமயம், வியாழக்கிழமைகளில் தங்களுடைய கடமையை ஒதுக்கி விட்டு பூஜை செய்கிறேன் என்பவர்களையும் விஷ்ணு கண்டுகொள்வதில்லையாம்..
எவர் ஒருவர் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்பு குட்டுவிரதம் இருந்து வேண்டுபவர்களேயே விஷ்ணு ஏற்றுக் கொள்வாராம்.
வியாழக்கிழமை, மஞ்சள் நிறம்
புஷ்பராகம் மற்றும் மஞ்சள் நிற கனக புஷ்பராகக் கல் தான் விஷ்ணுவுக்கு இஷ்டமான அதிர்ஷ்டக் கற்கள் ஆகும்... அதேபோல விஷ்ணுக்கு உகந்த விருப்பமான அதிர்ஷ்ட கிரகம் என்றால் அது வியாழன் தான். அந்தவகையில், வியாழக்கிழமைக்கும் மஞ்சள் நிறத்துக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன..
விஷ்ணு பகவான் வாழை இலைகளில் வசிப்பதாக நம்பப்படுவதால், வியாழக்கிழமைகளில் வாழை இலைகளை வணங்குகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications