எப்பேர்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் காலில் தங்கக் கொலுசு, தங்க மெட்டி அணியக் கூடாது ஏன்?
சென்னை: பெண்கள் கால்களில் தங்கக் கொலுசு , தங்க மெட்டி அணிந்து கொள்ளலாமா, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் என்றாலே புன்னகை அழகுதான்! அதை போல் பொன் நகையும் அழகுதான். அதிலும் கால்களுக்கு திருமணமான பெண்களுக்கு மெட்டி ஒலியும், திருமணமாகாத பெண்களுக்கு கொலுசு ஒலியும் கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.

காலில் மெட்டி அணிவது எப்படி ஒரு விதமான அக்குபிரஷர் பாயிண்டோ அது போல்தான் காலில் கொலுசு அணிவதும் அணிகலன் என்பதை விட மருத்துவ ரீதியில் நன்மை பயக்கும்.
அண்மைக்காலங்களாக தங்கத்தில் கொலுசு அணிவது அதிகரித்து வருகிறது. வெள்ளி, ஐம்பொன், ஆகியவற்றில் கொலுசு அணிந்தாலும் தங்கத்தில் கொலுசு அணிபவர்களும் உள்ளனர். சொல்ல போனால் எப்பேர்பட்ட கோடீஸ்வரராக இருந்தாலும் தங்கத்தில் கொலுசு அணியக் கூடாது என்பார்கள். இதைத்தான் சாஸ்திரங்களும் சொல்கின்றன.
ஜோதிட ரீதியில் பார்த்தோமேயானால் ஒவ்வொரு உடல் பாகமும் நவக்கிரங்களில் ஒவ்வொரு கிரகங்களை குறிக்கும். அந்த வகையில் கால் என்பது சனி பகவானின் அம்சம் ஆகும். தங்கம் என்பது குருபகவானின் அம்சம். இதனால்தான் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் குரு ஓரையில் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதனால் குருவின் பூரண அருள் கிடைக்கும். தங்கமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் குரு ஓரையில் நகை வாங்குவதற்கான ஐதீகம் ஆகும். வயிறு பகுதிகள்தான் குருவிற்கான அம்சமாகும். இதனால்தான் தங்கத்தில் திருமாங்கல்யம், செயின், நெக்லஸ், ஒட்டியாணம் உள்ளிட்டவைகளை அணிகிறோம்.
குருவின் ஆதிக்கம் கொண்ட தங்கம், மகாலட்சுமியின் அம்சம் ஆகும். தங்கத்தை அணிவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் குருவின் அம்சம், மகாலட்சுமியின் அங்கமாக திகழும் தங்கத்தை காலுக்கு கீழ் அணிவதை தவிர்க்க வேண்டும் என சொல்கிறார்கள் முன்னோர்கள். தங்கத்தை கால்களில் அணிவது பாவம் என்கிறார்கள். அவ்வாறு அணிவது மகாலட்சுமியான தங்கத்தை அவமதிக்கும் செயல் என சொல்கிறார்கள்.
அவமதிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கத்தை காலில் அணிவதால் நேர்மறை எண்ணங்கள் பெருகுவதற்கு பதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. எனவே தங்க கொலுசு, தங்க மெட்டி அணிவதால் நமக்கு நன்மையை காட்டிலும் தீமையே அதிகமாக உள்ளது.
மேலும் சனி பகவானும் குரு பகவானும் பகை கிரகங்கள். எனவே சனியின் அங்கமான காலில் குருவின் அம்சமான தங்கத்தை அணிவது கூடாது. இதே வெள்ளியை அணியலாம். சுக்கிரனின் ஆஸ்தான ஆபரணம் வெள்ளி. இந்த கிரகம் எல்லா கிரகங்களுடன் நட்பு பாராட்டும், அதனால் காலில் வெள்ளி அணியலாம். எனவே தங்க கொலுசு, தங்க மெட்டியை ஒரு போதும் அணியக் கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள்.
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications