இரவில் குடுகுடுப்பைக்காரர்கள் சொல்றதை நம்பலாமா? இவங்க பின்னாடி இப்படியொரு காரணமா? அதென்ன உடுக்கை?
சென்னை: "நல்ல காலம் பிறக்குது, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டுக்காரங்களுக்கு கிழக்க இருந்து நல்ல சேதி வரப்போகுது" என குடுகுடுப்பையை ஒலித்துக்கொண்டு குறி சொல்வதெல்லாம் உண்மையா? குடுகுடுப்பைக்காரர்கள் சொல்வது பலிக்குமா? அதை சுருக்கமாக பார்ப்போம்.
குடுகுடுப்பைக்காரர்களின் பாரம்பரியமான குலத்தொழில் இதுவாகும்.. ஒரே நேரத்தில் பல நிறங்களில் உடைகளை அணிந்திருப்பார்கள்.. முகத்தில் மஞ்சளும், நெற்றியில் மிகபெரிய சைஸ் குங்குமமும் வைத்திருப்பார்கள்..

சிறிய உடுக்கை: குடுகுடுப்பை எனப்படும் சிறிய உடுக்கையை ஒலித்துக்கொண்டு குறி சொல்லுவார்கள்.. இவ்வாறு சொல்லி கொண்டே வரும்போது, மக்களிடமிருந்து உணவு, தானியம், பழைய துணிகள், பணம் போன்றவற்றை பெற்று வாழ்க்கை நடத்துவார்கள்..
இவர்களுக்கு கோடங்கிகள் என்றும் மற்றொரு பெயர் உண்டு.. தங்களது குல தொழிலை மறக்காமல் சமுதாய கட்டாய பழக்க வழக்கமாக நள்ளிரவில் குடுகுடுப்பை அடித்து ஜக்கம்மா அருள்வாக்கு குறி சொல்லி வருவது தற்போது கிராமப்புறங்களில் கூட அரிதாகிவிட்டது.
சிவபெருமான்: குடுகுடுப்பைக்காரர்களின் கையில் உள்ளது, சிவபெருமானுக்குரிய உடுக்கையாகும்.. இதை எழுப்பியே வாக்கு சொல்வார்கள்.. உடுக்கையை ஒலிக்கும்போது, சிவபெருமானை மனதில் தியானித்து, அந்த நேரத்தில் மனதில் உதிக்கும் கருத்துக்களை சொல்வார்கள். ஒருசிலர் கையில் கோல் வைத்து குறி சொல்வார்கள்.. கோல் வைத்திருப்பவர்கள், முருகப்பெருமானை மனதில் தியானித்து குறி சொல்வார்கள்.
குடுகுடுப்பைக்காரர்கள் யார் என்பதற்கு ஒரு புராண கதையும் உள்ளது.. அதாவது, பூமியை படைத்த ஈசுவரன், ஒவ்வொரு மனிதனுக்கும் படியளப்பதற்காக, ஒவ்வொரு தொழிலை செய்யும்படி ஒதுக்கிவிட்டாராம்.. அந்த நேரத்தில், ஒரே ஒரு நபர் மட்டும் தூங்கிவிட்டாராம். கண்திறந்து பார்த்தபோதுதான், தான் தனித்துவிடப்பட்டது தெரிந்துள்ளது. அதனால் சிவபெருமானிடம் சென்று தனக்கு ஏதாவது தொழில் தருமாறு கேட்டிருக்கிறான்.
புராண பின்னணி: ஆனால், எல்லா தொழில்களும் ஏற்கெனவே பங்கிடப்பட்டு பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. என்று யோசித்துள்ளார். பிறகு, தன்னுடைய கையிலிருந்த சித்துடுக்கையையும் சீங்குழலையும் தந்து, "நீ சொல்வது அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும். இவற்றை வைத்துப் பிழைத்துக்கொள்" என்றாராம். அப்போது முதல், குடுகுடுப்பைக்காரர்களாக இவர்கள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
குடுகுடுப்பைக்காரர்கள் சொல்லுகின்ற கடந்த கால விஷயங்கள் மிக சரியாக இருக்கும் என்றும், எதிர்காலத்தை பற்றி அவர்கள் சொல்வது பெரிதாக எதுவும் நடந்தது கிடையாதாம். ஆனால் அந்த காலத்தில் குடுகுடுப்பைகாரர்கள் நிஜமாகவே மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தார்களாம்.. அதனால் அவர்கள் சொன்னது அந்த காலத்தில் பெரும்பாலும் பலித்ததால், முன்னோர்கள் இவர்களை நம்பினார்கள். ஆனால், இப்போது மந்திர பயிற்சி சிறப்பாக இருப்பதில்லை..
பயம் தேவையில்லை: அத்துடன், இவர்களில் போலியான குடுகுடுப்பைக்காரர்களும் உண்டு.. இதில், விரதமுறைகளை சரியாக கடைபிடித்து சொல்லும் தகவல்களை ஓரளவு நம்பலாம் என்றாலும், கெட்டதை முன்கூட்டியே கணித்து சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு எந்தவிதச் சிறப்புச் சக்தியும் இல்லை என்பதால், அதனால், குடுகுடுப்பைக்காரர் சொல்வதைக் கேட்டு மகிழவோ பயப்படவோ வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் பெரியவர்கள்.
அதுமட்டுமல்ல, இவர்களின் இளைய தலைமுறையினர் சமீப காலமாகவே, குடுகுடுப்பை தொழிலுக்கு செல்லாமல், கல்வி பயின்று, பல்வேறு பணியிடங்களுக்கு செல்ல துவங்கிவிட்டார்கள்.. இது வரவேற்க வேண்டிய விஷயமாகும்..!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications