மிதுனம் ராசியின் தனித்திறன்.. உங்க பிளஸ் & மைனஸ் இதுதான்! ஜெமினி ராசி அதிர்ஷ்ட நிறம்? பலே மிதுன ராசி
சென்னை: மிதுன ராசிக்காரர்களின் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களது பணப்புழக்கம் ஒரே சீராக இருக்குமாம்.. நேர்மை, அன்பு மிக்க மிதுன ராசிக்காரர்களின் மற்ற குணநலன்கள் என்னென்ன? இவர்களுக்கு வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் எப்படி அமைவார்கள்? மிதுன ராசியின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மிதுனம் ராசிக்காரர்கள் எப்போதும் இரண்டு விதமான சிந்தனைகளை கொண்டிருப்பார்கள்.. இரண்டு விதமான குணங்களை கொண்டிருப்பார்கள்.. இதனாலேயே மிதுனம் சின்னமும் இரட்டையாகவே இருக்கும்.

சிவப்பான, சிரித்த முகம் கொண்டவர்கள்.. ஆண்கள் லேசாக பெண் தன்மையுடனும், பெண்கள் லேசாக ஆண் தன்மையுடனும் இருப்பார்கள். சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்கள் மிதுன ராசிக்காரர்கள். யாரையுமே பார்த்ததுமே சரியாக கணித்து எடை போட்டுவிடுவார்கள்.
நேர்மையானவர்கள்
நேர்மைக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நெருக்கம் என்று சொல்லலாம்.. எதையும் ஒளித்து வைத்து பேச மாட்டார்கள்..ஏழை பணக்காரன் பாகுபாடு, ஜாதி, சமய பாகுபாடு, என எதுவுமே இவர்களிடம் இருக்காது. தலைக்கனம் இல்லாமல் கலகலவென்று பேசுவார்கள்..
எவ்வளவுதான் மனப்போராட்டம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். எந்தவிதமான சூழ்நிலையையும் சமாளித்துவிடுவார்கள். ஆனால், தாங்கள் சொல்வதே சரியென்று சாதிப்பார்கள்.. தங்களது கருத்தையும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்... மற்றவர்கள் சொல்லும் கருத்தையும் உடனே ஏற்க மாட்டார்கள்.
சாமர்த்தியசாலிகள்
எந்த ஒரு விஷயத்திலும் காரியத்தின் நல்லது - கெட்டது என இரண்டையுமே நன்றாக ஆராய்ந்த பிறகே செயல்படுவார்கள். மிகவும் சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதையும் கையாண்டு, வெற்றி பெறக்கூடியவர்கள்.. ஆனால், போலி ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். மிதுன ராசிக்காரர்களின் சிந்தனை துணிச்சலாக இருக்கும். இவர்களது பேச்சு, நடவடிக்கை, சிந்தனை என அனைத்துமே அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.. இவர்களின் செயல்பாடுகளும் அடுத்தவர்கள் பின்தொடருவது போல இருக்கும்.
ஆனால், மிதுன ராசிக்காரர்களை யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.. நெருக்கமாக பழகும் வெகுசிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எனவே, தங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களுடன் மட்டுமே நட்பை தொடருவார்கள்.
மூடநம்பிக்கையை வெறுப்பவர்கள் மிதுனம் ராசிக்காரர்கள்.. முற்போக்காக சிந்திப்பவர்கள் என்றாலும், பழமையையும் விட்டுத்தர மாட்டார்கள்.. வசதியான வாழ்க்கையை விரும்புவார்கள் என்றாலும், அதற்காக யாரிடமும் அடிபணிந்து போக மாட்டார்கள்.
மிதுனம் ராசிக்காரர்கள்
மிதுனமும் கன்னியும் புதனால் ஆளப்படும் ராசி என்பார்கள்.. தகவல் தொடர்புக்கான தூது கிரகமாக புதன் உள்ளதால், மிதுனம் ராசியுடையவர்கள், எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தி விடுவார்கள்.. பெரும்பாலும் இவர்கள் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள்.. அதனால்தான், இவர்களுக்கு மிகப்பெரிய நட்பு வட்டாரம் அமையும்.
கேலி கிண்டலாக பேசியே பலரையும் ஈர்த்துவிடுவார்கள்.. விவாதங்களை செய்தும், கலந்துரையாடியும், நகைச்சுவையாக பேசியும், நட்புகளை வைத்து கொள்வார்கள்.. எந்த கட்டுப்பாட்டுக்கும், யார் கட்டுப்பாட்டுக்கும் விழ மாட்டார்கள்.. சுதந்திர விரும்பிகள். புதன் அமைந்துள்ளபடியால், சிறந்த கல்விமான்களாக அல்லது பத்திரிகை ஆசிரியராக விளங்குவார்கள். சுக்கிரனும், புதனும் சேர்ந்திருந்தால், சினிமா போன்ற கலைத்துறையிலும் புகழ்பெறுவார்கள். வேகமாக புத்தகத்தை வாசிப்பார்கள். கண்ணியத்துடன் பேசுவார்கள்.
மிதுன ராசிக்காரரின் சிந்தனை எப்போதும் பாசிட்டிவாக இருக்கும். இதனால் இவர்களுக்கு மன அழுத்தம், மனக் கவலை போன்றவை இருக்காது. யாரும் இல்லாத வீட்டில் தனியாக இருக்க மாட்டார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள்..
கலை ஆர்வம் கொண்டவர்கள்
கலை ஆர்வம் மிக்கவர்கள் இந்த ராசிக்காரர்கள்.. சினிமா, மியூசிக், டான்ஸ், இலக்கியம் என கலையின் ரசனை விரிவடைநது கொண்டே செல்லும்.. வெறும் ரசனை என்று மட்டுமல்லாமல், அந்தந்த கலையின் நுணுக்கங்களையும் ஆழமாக தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், இப்படிப்பட்ட கலாரசனை மிகுந்தவர்களுக்கு, பெரும்பாலும் பொருத்தமில்லாத துணை அமையுமாம். இதில் ஒருவர் மட்டுமே இன்னொருவர் மீது அதிகமான அன்பு காட்டுவார்கள். அதேபோல தன் துணையை விட்டுட்டு, அடுத்தவர் மீது அன்பு காட்டவும் வாய்ப்புண்டு.
மிதுன ராசிக்காரர்களின் திருமணம் பெரும்பாலும் காதல் திருமணமாக இருக்கும். காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்து திருமணம் செய்து கொள்வார்கள்.
அதிர்ஷ்டசாலிகள்
ஆனால், இவரை காதலிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏனென்றால், தங்கள துணைக்கு சர்ப்ரைஸ் தந்து அசத்துவதில் மிதுன ராசிக்காரர்கள் முன்னணியில் இருப்பவர்கள்.. அதாவது, தன்னை பார்த்து பிறர் வியக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பார்கள், இயல்பிலேயே கலாரசனை மிக்கவர் என்பதால், கவிதை எழுதி கலக்குவார்கள்.. ஓவியம் வரைந்து அசரடிப்பார்கள்..
மிதுன ராசிக்கு 9ஆம் இடமான கும்பம், 10ஆம் இடமான மீனம் என இந்த 2 ராசிகளிலும் வாழ்க்கைத்துணை அமைந்தால், அவர்களின் வாழ்க்கை வெகுசிறந்து அமையும். அதிலும் கும்ப ராசிக்காரர்கள் இவர்களுக்கு துணையாக அமைந்தால், மகிழ்ச்சியாக இருக்கும்.
அதுமட்டுமல்ல, மிதுனத்துக்கு ரிஷபம், துலாம், மகரம் போன்றவை பொருந்தா ராசிகள். எனவே, இவர்களுடன் மணம் முடித்தால், மகிழ்ச்சி எட்டாக்கனியாகிவிடும். அப்படியே மணம் முடித்துவிட்டாலும் அவர்களை விட்டு பிரிநது செல்ல மாட்டார்கள். மணமுறிவும் செய்யாமல், அனுசரித்து குடும்பத்தை நடத்துவார்கள்.
பிள்ளைகள் - அன்பு
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வாரகள்.. கோபமாக கூட பேசமாட்டார்கள்.. பிள்ளைகளின் பெரிய பெரிய சிக்கலையும், கண்டிப்பு மற்றும் கனிவுவாக பேசியே தீர்த்து வைப்பார்கள். அவர்களை நல்வழிப்படுத்துவார்கள்... சுருக்கமாக சொல்லப்போனால், பிள்ளைகளை சிரமத்திற்கு உள்ளாக்காமல் வளர்ப்பார்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பெற்ற பிள்ளைகளாலும் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை பெற்றுத்தரும்.. ஆனால், மிதுன ராசிக்காரர்கள் திருமணத்திற்கு பின்புதான் சிறப்பாக வாழ்வார்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் யாருடைய தயவும் இல்லாமல் தனிமையாகவே வாழ நினைப்பார்கள். இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதனை கண்ணும் கருத்துடன் பொறுப்பாக செய்து முடிப்பார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு தாங்களே தீர்வை காண்பார்கள்.. பிறர் பிரச்சனைகளுக்கும் அசால்டாக தீர்வை சொல்லி விட்டு போவார்கள்.
தனிமை விரும்பி - பயந்த சுபாவம்
மிதுன ராசிக்காரர் எப்போதும் தன்னை சுற்றிலும் அன்பானவர்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.. பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்பதால், தனியாக வீட்டில் இருக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று விரும்புவார்கள்.
சிறுநீரக தொடர்பான நோய், நரம்புத்தளர்ச்சி, சுவாச கோளாறு போன்றவை மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படலாம். மிதுன ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவர்களாகவும், தடிமனாகவும் காணப்பட்டாலும், மன உளைச்சல் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனாலேயே உடல்நிலை பாதிக்கப்படும். நெஞ்சு வலி, இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு உணவை குறைத்துக் கொள்வது நல்லது. கீழே விழுந்து அடிபடும் வாய்ப்பும் உண்டு.
மிதுன ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் நீலம் ஆகும். சாம்பல் மற்றும் ஊதா நிறங்களும் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவை. மிதுன ராசிக்காரர்களுக்கு 5 அதிர்ஷ்ட எண்ணாகும். 5ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications