நிஜ ருத்ராட்சங்கள் எப்படி இருக்கும்? ருத்ராட்சம் வாங்கணுமா? போலி ருத்ராட்சத்தை இப்படி கண்டுபிடிங்க
சென்னை: ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் என்பார்கள்.. எனவேதான் ஆன்மீகத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.. உடலுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்மைகளை தரக்கூடியது.. தெய்வீக தன்மை கொண்ட ருத்ராட்சைகளில், சிலசமயம் போலிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த போலி ருத்ராட்சைகளை எப்படி கண்டுபிடிப்பது?
ருத்ராட்சங்கள் மரங்களில் வளர்வதுதான் இந்த ருத்ராசை.. இந்த மரத்திலிருந்து நீல நிறத்தில் பழங்கள் கிடைக்கும்.. இந்த பழங்கள் காய்ந்து கருப்பு நிறத்துக்கு மாறும்.. இவைகளை 2 நாட்கள் நீரில் ஊறவைத்த பிறகு, ஒவ்வொரு ஓடுகளிலிருந்தும் ருட்ராட்சம் வெளியே அகற்றப்படுகின்றன.

மருத்துவ தன்மை:
இந்தியாவின் சில இடங்களில் ருத்ராட்சங்கள் இருப்பதாக சொன்னாலும், உண்மையான ருத்ராட்சங்கள், முக ருத்ராட்சங்கள் நேபாளத்தில் மட்டுமே கிடைக்கிறதாம். ருத்ராட்சைகளில் ஏராளமான மருத்துவ தன்மையும், ஆன்மீக தன்மையும் இருப்பதால்தான், அதற்கான முக்கியத்துவமும் பெருகி கொண்டே வருகிறது.. எனினும் சில இடங்களில் போலியான ருத்ராட்சம் விற்கப்படுகிறது.
பொதுவாக, ருத்ராட்சம் எவ்வளவு முகங்களை கொண்டிருக்கிறதோ, அதற்கேற்றபடி அதன் விலைகளும் மாறும்.. இப்போதெல்லாம் ருத்ராட்சம், கோயில் வளாகத்திலும், கடைகளிலும், சர்வசாதாரணமாக கிடைக்கின்றன.
கிராக்கி அதிகம்:
வழக்கமாக, 1 முகம், 2, 3 என முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் மிக அரிதாக கிடைக்கக்கூடியவை. எனவே, இதற்கான டிமாண்டுகளும் அதிகம், இதற்கான விலையும் அதிகம். எனவே, இவைகளில் பெரும்பாலும் போலிகளை தயாரித்து கடைகளில் விற்பது அதிகரித்து வருகிறதாம்.
சிலர் 5 அல்லது 6 முக ருத்ராசத்தை உடைத்து, அதை சில பசைகளை கொண்டு ஒரு முகம் அல்லது 2 முக ருத்ராட்சத்தைப் போல மாற்றி போலியான ருத்ராட்சம் விற்கிறார்கள். எனவே, இவைகளிலுள்ள உண்மைத்தன்மையை எளிதில் யாராலும் கண்டுபிடிக்கவும் முடிவதில்லை-. 7 முக ருத்ராட்சங்கள் லட்சுமி அம்சம் வாய்ந்தவை. எனவே, 5 அல்லது 6 முக ருட்ராட்சத்தில் கோடுகளை போட்டு ஏமாற்றி கடைகளில் விற்கிறார்களாம்.
ருத்ராட்சைகள்:
போலி ருத்ராட்சைகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஒரு டம்ளர் நீரில் ருத்ராட்சையை போடும்போது, அது மூழ்கிவிட்டால், உண்மையான ருத்ராட்சையாம். தண்ணீரில் மிதந்தால் அது போலி ருத்ராட்சை என்கிறார்கள்.. ஆனால், சில உண்மையான ருத்ராட்சங்கள் தண்ணீரில் மூழ்கவும் செய்யும், மிதக்கவும் செய்யுமாம்.
அதுமட்டுமல்ல, சில இடங்களில் காம்புடன் ருத்ராட்சைகள் விற்கப்படுகின்றன.. ஆனால், காம்புகள் ருத்ராட்சைக்கு கிடையாது.. ஒரிஜினல் என்று சொல்வதற்காகவே இப்படி சிலர் ஏமாற்றி விற்கிறார்களாம். சில இடங்களில் பிளாஸ்டிக்குகளிலும் ருத்ராட்சையை விற்பதால், இதனை வாங்குவதை தவிர்க்கலாம்.
ஒரிஜினல்:
அதேபோல, ஒரு முக ருத்ராட்சைகள் அரிதானது என்பதால், அதை வாங்குவதை தவிர்த்துவிடலாம். அதுமட்டுமல்லாமல், ஒரே உருண்டையில் நிறைய கோடுகள், ஒரே நேர்க்கோட்டில் சீராக போடப்பட்டிருந்தாலும் அதை வாங்குவதை தவிர்க்கலாம்.
உண்மையான ருத்ராட்சமா என்பதை கண்டறிய கடுகு எண்ணெயில் போடுவார்கள்.. ருத்ராட்சையின் நிறம் போய்விட்டால் அது போலி என்று அர்த்தம்.. உண்மையான ருத்ராட்சம் அதே நிறத்துடன் இருக்கும்.. அதேபோல, கூர்மையான பொருட்களால் கீறும்போது, அதிலிருந்து இழைகள் வெளிப்பட்டால், அது உண்மையான ருட்ராட்சைகள் என்று அர்த்தமாம்.












Click it and Unblock the Notifications