உங்கள் மொபைலை டெக் கம்பெனிகள் ஒட்டுக்கேட்பது உண்மை தான்.. கடைசியில் ஒப்பு கொண்ட பிரபல நிறுவனம்
வாஷிங்டன்: பக்கத்தில் இருக்கும் நபருடன் நாம் பேசும் விஷயம் கொஞ்ச நேரத்தில் செல்போனில் விளம்பரமாக வந்து நாம் பார்த்து இருப்போம். இதைப் பார்த்து நாம் குழம்பிப் போய் இருப்போம். நமது உரையாடல்களை நமது செல்போன் ஒட்டுக் கேட்கிறதா என்ற சந்தேகம் நிச்சயம் வந்திருக்கும். உங்கள் சந்தேகம் உண்மைதானாம். இது குறித்த பகீர் ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
நாம் அருகே உள்ளவருடனோ அல்லது செல்போனிலோ எதாவது ஒரு பொருள் குறித்துப் பேசுவோம். பிறகு சில மணி நேரத்தில் அது தொடர்பான விளம்பரம் உங்கள் மொபைலில் வரும். இது நம்மில் பலருக்கும் நடந்து இருக்கும்.

ஒட்டுக் கேட்கும் செல்போன்: இதனால் நாம் பேசுவதை எல்லாம் செல்போன் ஒட்டுக்கேட்டுக் கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். இருப்பினும், அதற்கான ஆதாரம் தான் இல்லை. பிரபல நிறுவனங்கள் எல்லாம், உரையாடல்களை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம் எனக் கற்பூரம் அடித்து சத்தியம் செய்து கொண்டே வந்துள்ளன.
ஆனால், இதில் இப்போது முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. நமது உரையாடலைக் கேட்கும் சாப்ட்வேர்கள் மொபைலில் இருக்கிறதாம். இதைப் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம் நீண்டகால சந்தேகம் உண்மையாகிவிட்டது. இது ஏதோ ஊர்ப் பெயர் தெரியாத கம்பெனி இல்லை. சிறிய கம்பெனி என்றால் நாம் இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை.
பிரபல நிறுவனம்: கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக கொண்டுள்ள நிறுவனம் தான் இதை ஒப்புக்கொண்டு இருக்கிறது. பயனாளர்களின் தகவல்களைச் சேகரிக்க மொபைல் மைக்கை பயன்படுத்த இந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது நீங்கள் வீட்டில் அரிசி, சர்க்கரை இல்லை எனப் பேசினாலும் சரி, சொகுசு கார் குறித்துப் பேசினாலும் சரி, அவை அனைத்தையும் உங்கள் செல்போனும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதன் பிறகே அது சார்ந்த விளம்பரங்களை நமக்குக் காட்டுகிறது.
நாம் கூகுள் செய்ததால் தான் இந்த விளம்பரங்கள் வருகிறது என நாம் நினைத்து இருப்போம். ஆனால் அப்படியல்ல. 404 மீடியா என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நீங்கள் கூகுளில் தேடுவது மட்டுமின்றி செல்போனை அருகே வைத்துப் பேசுவதும் கூட விளம்பரமாக வருவதாகக் கூறியிருக்கிறது.
என்ன மேட்டர்: காக்ஸ் மீடியா குழுமம் தனது முதலீட்டாளர்களுக்குச் சமீபத்தில் பிரசன்டெஷன் ஒன்றைச் செய்தது. அதில் ஆக்டிவ் லிசனிங் தொழில்நுட்பம் மூலம் செல்போன் அருகே நடக்கும் உரையாடல்களைக் கண்காணித்து பகுப்பாய்வு செய்ய ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அந்த நிறுவனம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போன் அருகே வைத்து இருக்கும் போது நீங்கள் பேசும் அனைத்தையும் இது கேட்கும். கவனிக்கும். இதன் மூலம் துல்லியமாக யாருக்கு எந்த விளம்பரம் தேவை என்பதைக் கண்டறிய முயல்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் நாம் பேசுவதைப் பிரபல நிறுவனங்கள் ஒட்டுக் கேட்பதை 404 மீடியா நிறுவனம் மூன்றாவது முறையாக அம்பலப்படுத்துகிறது. கடந்த டிசம்பரில் பாட்கேஸ்ட் சாதனத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது உறுதியானது. அதேபோல இதற்கு முன்பு காக்ஸ் மீடியாவும் இதுபோல செய்வது உறுதியானது.
விளக்கம்: காக்ஸ் மீடியாவின் கஸ்டமர்களாக பேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், இது பரபரப்பைக் கிளப்பியது. அந்த இரு நிறுவனங்களும் இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளது. முறையான அனுமதி இல்லாமல் பயனர் தரவு சேகரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டது. மேலும், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications