சென்னை ஸ்டேடியத்தில் ஏர்டெல் தான் நம்பர் 1.. கிரிக்கெட் பார்ப்பவர்களுக்காக ஸ்பெஷல் Unlimited Data!
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவை முன்னிட்டு, செல்போனில் மேட்ச் பார்ப்பவர்கள் தடையின்றி முழுமையாக பார்க்கும் வகையில் அன்லிமிட்டெட் டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக உள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களையும், சிறப்பு பிளான்களையும் வழங்கி வருகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் ஃபீவர்: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு டெலிகாம் நிறுவனங்களும் சிறப்பு சேவைகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில், ஏர்டெல் நிறுவனம், ஐசிசி உலகக் கோப்பை தொடரை, செல்போன்களில் தடையின்றி பார்க்கும் வகையில் 99 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் டேட்டா பேக் பிளானை வழங்குகிறது. அதேபோல ரூ.49க்கு 6 ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது ஏர்டெல்.
ரூ.99 பேக்: அதன்படி, ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக் இப்போது வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் அன்லிமிட்டெட் டேட்டாவை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 20 GB அதிவேக இணைய சேவையை அனுபவிக்கலாம். Fair usage policy-யின் படி அதன் பிறகு வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாளைக்கு 20 GB வீதம் இரண்டு நாட்களுக்கு, மொத்தம் 40 GB அதிவேக டேட்டாவை அனுபவிக்க முடியும்.
இந்த 99 ரூபாய் பேக்கைப் பயன்படுத்த, நீங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். ஏற்கனவே ஆக்டிவ்வாக இருக்கும் பிளானில் இந்த 99 ரீசார்ஜின் பலன்களை பெறலாம். இந்த பேக் மூலம், நீங்கள் தடையின்றி கிரிக்கெட் வேர்ல்ட் கப் மேட்ச்களை பார்க்கலாம்.

ரூ.49 பேக்: ரூ.49க்கும் ஒரு சிறப்பான டேட்டா Add-on பேக்கை வழங்குகிறது ஏர்டெல். 49 ரூபாய் பேக்கில், 6 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாள் முழுவதும் இதனை பயன்படுத்தலாம். இவை போக, 148 ரூபாயில் 15 ஜிபி டேட்டா வழங்கும் பேக்கையும் தருகிறது ஏர்டெல். இதில் வேலிடிட்டி காலம், உங்கள் பிரீபெய்டு பிளான் வேலிடிட்டி முடியும் வரை என்பது சிறப்பம்சம்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய மொபைல் ஆபரேட்டர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக
அனைத்து கிரிக்கெட் மைதானங்களிலும் உள்ள மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை Opensignal நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களில் ஏர்டெல் முன்னிலை வகித்துள்ளது. குறிப்பாக 5ஜி நெட்வொர்க்கில், ஏர்டெல் சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிறந்த அனுபவத்தை வழங்கியது.

சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏர்டெல் டாப்: Open signal அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 40 பெரிய நகரங்களில் மொபைல் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவத்தின் தரத்தில் மற்ற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது ஏர்டெல், இந்த நகரங்களில் பெரும்பாலானவற்றில் ஓவர் ஆல் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ அனுபவத்திற்காகவும் 5G லைவ் வீடியோ அனுபவத்திற்காகவும் சிறப்பாகச் செயல்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைதானங்களில் மொபைல் வேகத்தில், ஒட்டுமொத்தமாக ஏர்டெல் நெட்வொர்க்கின் டவுன்லோடு வேகம் 30.5 Mbps. 5G டவுன்லோடு வேகம் 274.5 Mbps. ஏர்டெல் அப்லோடு வேகத்திலும் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல்லின் பதிவேற்ற வேகம் ஜியோவை விட 5.2 சதவீதம் அதிகமாகவும், வோடபோன் ஐடியாவை விட 13 சதவீதம் அதிகமாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications