போன்ல டேட்டா தீர்ந்துபோச்சா? ஏர்டெல் வழங்கும் எக்ஸ்ட்ரா நெட் பேக்.. அதே விலையில் இப்போ டபுள் ட்ரீட்!
சென்னை: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் தமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரூ.99 பிளானை திருத்தம் செய்துள்ளது. அதன்படி, முன்பு வழங்கப்பட்டதை விட கூடுதல் வேலிடிட்டி, கூடுதல் டேட்டா வழங்கப்படும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏர்டெல் நிறுவனம் 99 ரூபாய் மதிப்பிலான அன்லிமிடெட் டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியது. ஜியோ, வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரூ.99 அன்லிமிடெட் டேட்டா பேக்கை புதிதாக ரிவைஸ் செய்துள்ளது ஏர்டெல்.

அன்லிமிடெட் திட்டங்களுடன் கூடிய அதிவேக டேட்டா தீர்ந்து போகும்போது இந்த 99 ரூபாய் டேட்டா பேக் செயல்படும். ஏர்டெல் இப்போது அதன் ரூ.99 அன்லிமிடெட் டேட்டா பேக்கின் பலன்களை அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக் என்ன பலன்களை வழங்குகிறது என்பதை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக் திருத்தப்படுவதற்கு முன், வாடிக்கையாளர்களுக்கு 30 GB அதிவேக டேட்டாவை 1 நாள் வேலிடிட்டியில் வழங்கி வந்தது. 30 GB அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, ஏர்டெல் பயனர்கள் 64 Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். தற்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, ஏர்டெல் ரூ.99 டேட்டா பேக் இப்போது வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் டேட்டாவை வழங்குகிறது. டேட்டா அளவை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 20 GB என திருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வேகம் 64 Kbps வரை இருக்கும். அதாவது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு நாளைக்கு 20 GB வீதம் இரண்டு நாட்களுக்கு, மொத்தம் 40GB அதிவேக டேட்டாவை அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் மாற்றியுள்ள இந்த புதிய 99 ரூபாய் ரீசார்ஜ் மூலம் கூடுதலாக ஒரு நாள் வேலிடிட்டியுடன் சேர்த்து 10 ஜிபி டேட்டாவை எக்ஸ்ட்ராக பயன்படுத்தலாம். இந்த டேட்டா பேக்கைப் பயன்படுத்த, நீங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். ஏற்கனவே ஆக்டிவ்வாக இருக்கும் பிளானில் அன்றைய கோட்டா முடிவடைந்த பிறகு இந்த 99 ரீசார்ஜின் பலன்களை பெறலாம்.
நீங்கள் 1 நாள் வேலிடிட்டி கொண்ட பிளானை விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் ரூ.49 ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இன்றைய நாளுக்கான டேட்டா முடிவடைந்ததும், ரூ.49 Add-on ரீசார்ஜ் செய்து கூடுதலாக 6 ஜிபி டேட்டா பெறலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications