Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்வீட் ஷாக்.. Perplexity Pro AI சந்தா இலவசம்! க்ளெய்ம் செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர்டெல் நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓர் ஆண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. இதனை ஏர்டெல் யூசர்கள் கிளெய்ம் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது மொபைல், பிராட் பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓர் ஆண்டுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

Airtel Perplexity AI

இதன் மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு யூசர்கள், இலவசமாக Perplexity AI வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Perplexity AI என்பது என்ன?

ChatGPT, Gemini போன்ற AI சாட்பாட்களைப் போல் இல்லாமல், Perplexity என்பது AI-இயக்கப்படும் சர்ச் என்ஜின். இது எதையும் தேடவும் இணையத்திலிருந்து தகவல்களைச் சேகரித்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் செய்யும்.

வெப் சேர்ச் சார்ந்து உரையாடல் பாணியிலான பதில்களை Perplexity AI வழங்கி வருகிறது. பயனர்களின் தேடலை வெறும் லிஸ்டிங் பாணியில் aல்லாமல் நேரடியாக, ஆழமாக ஆய்வு செய்து பதில்கள் வழங்கும் வகையில் செயல்படும் Perplexity AI வரவேற்பைப் பெற்றுள்ளது. பயனர்களுக்கு தேவையான தகவலை சுலபமாகப் புரிந்துகொள்ளும் முறையில் இது வழங்குகிறது.

Perplexity-ன் அடிப்படை வெர்ஷன் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. அதே நேரத்தில் Perplexity Pro AI மேம்பட்ட அம்சத்துடன் தகவல்களை தருகிறது. அதுவும் இந்த தகவல்கள் ரியல் டைமில் இருக்கும். தினசரி அதிக எண்ணிக்கையிலான தேடல்கள், படங்கள் உருவாக்கம், டாக்குமெண்ட் பதிவேற்றுதல் உள்ளிட்ட வசதிகளும் இதில் கிடைக்கும்.

இலவசமாக வழங்கும் ஏர்டெல்

இந்நிலையில்தான் Perplexity Pro-வை ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளது. ஏஐ மாடல்களான ஜிபிடி-4.1 மற்றும் Claude உள்ளிட்ட பயன்பாடுகளையும் இதில் பெற முடியும். பெர்ப்ளெக்ஸிட்டி புரோ சேவையின் ஆண்டு சந்தா உலகளவில் ரூ.17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி புரோ சந்தா, தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் (மொபைல், வைஃபை மற்றும் DTH) அனைவருக்கும் ஒரு வருடத்திற்காக இலவசமாக வழங்கப்படுகிறது.

முதல் முறையாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனம் ஒன்றுடன் Perplexity கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு ஜப்பானின் சாப்ட் பேங்க் மற்றும் அமெரிக்காவின் டி-மொபைல் உடன் சேர்ந்து பயனர்களுக்கு தனது சேவையை Perplexity வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஐ கூட்டணி

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் கோபால் விட்டல் கூறுகையில், "பெர்ப்ளெக்ஸிட்டியுடன் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டணியை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். முன்னேறிய AI திறன்களை, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வருகிறோம். இந்த சக்திவாய்ந்த நேரடி அறிவுப் பொக்கிஷத்தை, எவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் எந்த கூடுதல் கட்டணமுமின்றி வழங்குகிறது ஏர்டெல்.

இந்தியாவில் இந்த வகை முதல் தலைமுறை AI கூட்டணியான இது, நவீன டிஜிட்டல் உலகத்தில் உருவாகும் புதிய டிரெண்டுகளை எளிதாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ரூ.17,000 மதிப்புள்ள சப்ஸ்கிரிப்ஷன்

மொபைல் செயலி மற்றும் பிரவுசரில் Perplexity Pro AI வசதியை ஏர்டெல் பயனர்கள் பயன்படுத்த முடியும். ரூ.17,000 மதிப்புள்ள இந்த Perplexity Pro AI சேவையை பயனர்களுக்கு கட்டணமின்றி வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதற்கு பயனர்கள் தங்களது ஜிமெயில் அல்லது வேறு கணக்கு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.

எப்படி கிளெய்ம் செய்வது?

ஏர்டெல் யூசர்ள் இதை பெற ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் லாக்-இன் செய்து இதனை க்ளெய்ம் செய்ய வேண்டும்.

ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) செயலிக்குச் செல்லவும்.

அதில், Rewards என்னும் ஆப்ஷனை தேர்வு செய்தால், அதில், ரூ.17,000 மதிப்புள்ள 12 மாத Perplexity Proவை இலவசமாகப் பெறுங்கள் என்ற திரை காட்டப்படும். அதன் கீழ் 'க்ளெய்ம்' என்பதை தேர்வு செய்து இந்த வசதியை ஓராண்டுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+