சீனாவுக்கு போட்டியா சீனாவே! டீப்ஷீக்கை கதற விடும் அலிபாபா! இப்படி ஒரு மாடலை கேட்டிருக்கவே மாட்டீங்க!
பெய்ஜிங்: சீனாவின் பிரபல ஈ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா டீப்ஷீக் மற்றும் ஓபன் ஏஐ மாடல்களுக்கு போட்டியாக QwQ-32B என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த தரவுகளுடன் அதே நேரத்தில் பிரச்சினைகளை எளிமையாக தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏ ஐ மாடல் டீப்ஷீக் மற்றும் ஓபன் ஏஐ மாடல்கள் விட சிறப்பாக செயல்படும் என அலிபாபா கூறியுள்ளது.
உலகம் முழுக்க சாட் ஜிபிடி, கூகுளின் ஜெமினி, சாம்சங்-ன் ஏஐ, மெட்டாவின் லாம உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் டெக் உலகில் புதிய புயலை கிளப்பியது டீப்சீக் ஏஐ.

ஏற்கனவே டெக் உலகில் குறிப்பாக ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், டீப்சீக் மூலம் தற்போது சீனா களத்தில் குதித்துள்ளதோடு, எடுத்த எடுப்பிலேயே கடும் போட்டியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெக் வர்த்தகத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வரும் கூகுள், மெட்டா போன்றவையே இதனால் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. காரணம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஆகியவை பிரிமியம் முறையில் மட்டுமே கூடுதல் நவீன வசதிகளை தருகின்றன.
ஆனால் டீப்சீக் ஆர்1 அனைத்து விதமான நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அதே நேரத்தில் சார்ஜ் ஜிபிடி, ஜெமினியை விட டீப் சீக் அதிக செயல் திறனை கொண்டு இருக்கிறது. சாட்ஜிபிடியை உருவாக்க ஓபன் ஏஐ 100 மில்லியன் டாலரை செலவிட்டது. ஆனால் டீப்டீக் வெறும் 6 மில்லியன் டாலரை மட்டுமே கொண்டு அதனை உருவாக்கி இருக்கிறது. சாட்ஜிபிடியை தாண்டி ஆப்பிள் யூஎஸ் ஸ்டோர்களிலும் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் டீப்ஷீக்கு எதிராக மற்றொரு சீன நிறுவனமே களமிறங்கியுள்ளது. சீனாவின் பிரபல ஈ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா டீப்ஷீக் மற்றும் ஓபன் ஏஐ மாடல்களுக்கு போட்டியாக QwQ-32B என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த தரவுகளுடன் அதே நேரத்தில் பிரச்சினைகளை எளிமையாக தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏ ஐ மாடல் டீப் சீட் மற்றும் ஓபன் ஏஐ மாடல்கள் விட சிறப்பாக செயல்படும் என அலிபாபா கூறியுள்ளது.
அலிபாபாவின் புதிய ஏஐ மாடலான குவாண் 2.5 எனும் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த QwQ-32B உருவாக்கப்பட்டிருக்கிறது. உரையாடல்கள், ஆடியோ,இந்த படங்கள் ஆகியவற்றை நுணுக்கமாக பகுப்பாய்வு செய்து அதற்கான தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது இந்த QwQ-32B. டீப்ஷீக் 671 பில்லியன் பாராமீட்டர் தரவுகளை கொண்டிருக்கிறது. ஆனால் QwQ-32B வெறும் 32 மில்லியன் பாரா மீட்டர் தரவுகளை மட்டுமே கொண்டுள்ளதாக அலிபாபா பொறுமையுடன் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாடல் கணிதம், கோட் ரைட்டிங் மற்றும் பிற சவால்களை சமாளிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுவதாகவும், டீப்ஷிக், ஓப்பன் ஏஐ மாடல்களை விட இந்த ஏஐ மாடல் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அலிபாபா நிறுவனம் ரீன்ஃபோர்ஸ்மென்ட் லர்னிங் (Reinforcement Learning - RL) என்ற முறையை பயன்படுத்தி தனது AI மாடல்களை மேம்படுத்தி வருகிறது. இந்த ஏஐ மாடல்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அவற்றுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்கும் திறன் பெற்றது.
அலிபாபா, எதிர்காலத்தில் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) உருவாக்கும் இலக்கில் முனைப்புடன் செயல்படுகிறது. இதற்காக பல துறைகளில் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா இந்த புதிய ஏஐ மாடல் பற்றிய அறிவிப்பை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புதிய ஏஐ மாடல், உலக அளவில் பிற ஏஐ நிறுவனங்களுக்கு கடினமான போட்டியாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications