Samsung S23 Ultra போன் வாங்க போறீங்களா.. அமேசானில் யாரும் எதிர்பார்க்காத ஆஃபர்.. முந்துங்கள்
சென்னை: சாம்சங் ஃபிளாஷிப் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் அதிரடி ஆஃபரை கொடுத்துள்ளது.
அமேசானின் Great Republic Sale எனும் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதலிலேயே சலுகை விலைகள் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன், டேப், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சாம்சங் காலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. அந்த வகையில் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடலை ரூ 1,14,999 என்ற விலைக்கே வாங்கிவிடலாம். அதன் உண்மையான விலையை விட ரூ 35 ஆயிரம் குறைவாகும்.
இந்த சலுகை HDFC கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்குவோருக்கு கிடைக்கும். இது தவிர கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த எஸ் 23 அல்ட்ரா மாடல் ரூ..1.14 லட்சத்திற்கு கிடைக்கும். மேலும் தவணை வசதிகளில் வாங்கினால் ஜீரோ பர்சென்ட் வட்டியாகும்.
இந்த போன் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் என 3 நிறங்களில் கிடைக்கின்றன. இதன் டிஸ்பிளே 6.8 இன்ச் ஆகும். இந்த போனுக்கு பாதுகாப்பாக கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 போடப்பட்டுள்ளது. அதாவது ஐபோனுக்கு போடப்படும் கிளாஸ். ஆன்ட்ராய்டு 13 ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதன் எடை 234 கிராம் ஆகும்.
இது விற்பனைக்கு வந்த நாள் கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆகும். இந்த போனின் கேமரா 200 எம்பி ஆகும். வீடியோ 8 கே தரத்தில் இருக்கும். செல்பி கேமரா மட்டுமே 12 எம்பி ஆகும். அது போல் செல்பியில் வீடியோ 4 கே கிளாரிட்டியில் வரும். இதில் நீக்கப்பட முடியாத பேட்டரி உள்ளது. இதன் மெமரியும் மற்ற பாகங்களும் விலை அதிகம் என்பதால் இந்த போனின் விலை லட்சத்தை தாண்டுகிறது.
இது கட்டிங் எட்ஜ் டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்டது. இதன் கேமரா சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த போனை எல்லாராலும் வாங்க இயலாது. இந்த போன் மிகவும் பெரியதாக இருக்கும் என்பதாலும் இதில் கேமரா செட்டிங்ஸ் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாலும் இதை ஒரு கையில் கையாள்வது எளிதன்று.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications