ஆஹா.! ஜியோ ஹாட்ஸ்டாரை விடுங்க.. "அமேசானின் அசத்தல் வசதி!" இனி படம் பார்க்கும் அனுபவமே மாற போகுது
மும்பை: ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அமேசான் ஓடிடி புதிதாக ஒரு தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் புரியாத எந்தவொரு மொழியைச் சேர்ந்த படமாக இருந்தாலும் நொடிகளில் நாம் நமக்கு தெரிந்த மொழியில் பார்க்கலாம். இது ஓடிடியில் கேம் சேஞ்சராக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
இந்த காலத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மாதத்திற்கு 4 படத்திற்குப் போனவர்கள் கூட இப்போது ஒரு படமாகக் குறைத்துவிட்டனர். ஓடிடிகளில் அதிகளவில் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தற்போது இருக்கும் விலைவாசிக்கு, குடும்பமாக ஒரு படத்திற்குப் போனாலே குறைந்தது ரூ.2000 செலவாகிவிடும். இதனால் ஓடிடிகளில் படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

ஓடிடி
ஓடிடிகளை பொறுத்தவரை ஒரு முறை பணம் செலுத்திவிட்டாலே ஒரு மாதம் அல்லது ஓராண்டிற்குக் கூட அது போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கத் தனியாகக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், நாம் விரும்பிய படத்தை விரும்பிய நேரத்தில் பார்க்கலாம். எல்லாவற்றையும் விட மாற்று மொழி படங்களைக் கூட டப்பிங்கில் நமக்குத் தெரிந்த மொழியில் பார்க்கலாம்.
ஏஐ டப்பிங்
தியேட்டர்களில் எல்லா படமும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகாது. ஆனால், ஓடிடிக்களில் அப்படி இல்லை. எல்லா படங்களுமே டப் செய்யப்படும். இதற்குத் தனியாக ஒரு டீம் இருக்கும். இதற்கிடையே இந்த டப்பிங்கிலும் இப்போது ஏஐ புகுந்துள்ளது. ஏஐ மூலம் தானாகப் படம் மற்றும் வீடியோக்கள் டப் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை இப்போது அமேசான் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதனை அமேசான் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
அமேசான் நிறுவனம் மேலும் கூறுகையில், "இந்தத் திட்டத்தை நாங்கள் சோதனை செய்கிறோம். இதற்கு முன்பு டப்பிங் செய்யப்படாத படங்களையும் கூட இதன் மூலம் நமக்குத் தெரிந்து மொழியில் பார்க்கலாம். சோதனை முயற்சி என்பதால் தற்போது குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்த ஏஐ டப்பிங் இருக்கும். வும் காலங்களில் இதை அனைத்து படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
முதலில் இரண்டு மொழிகள்
எங்களிடம் உள்ள படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அதிகப்படியான மக்கள் அணுகும்படி மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கிறோம். முதற்கட்டமாக இப்போது ஆங்கிலம் மற்றும் லத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ் மொழிகளில் ஏஐ டப்பிங்கை வழங்குகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் மற்ற மொழிகளுக்கு ஏஐ டப்பிங் எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்த தகவல்களை அமேசான் பகிரவில்லை.. முதற்கட்டமாக இப்போது 12 படங்கள் மற்றும் சீரியஸ்களுக்கு ஏஐ டப்பிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது முழுக்க முழுக்க ஏஐ டப்பிங்காகவும் இருக்காது. ஏஐ டப் செய்து கொடுப்பது சரியாக இருக்கிறதா என்பதை வல்லுநர்கள் செக் செய்தே அப்லோட் செய்வார்களாம். அதில் எதாவது பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதற்காக இந்த நடவடிக்கை
அமேசான் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "டப்பிங் செய்யப்படாத படங்களுக்கு மட்டும் ஏஐ பயன்படுத்துகிறோம்.. அனைத்து தரப்பு மக்களும் படங்கள் மற்றும் சீரியஸ்களை அணுகக்கூடியதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதற்கே இதைச் செய்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் டப்பிங்கிற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் யூடியூப் தளத்தில் இதுபோல ஏஐ டப்பிங் வசதி கொண்டு வரப்பட்டது. அதில் குறிப்பிட்ட வீடியோக்களை எந்தவொரு விரும்பிய மொழியிலும் டப்பிங் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications