ஆப்பிள் யூசர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் Apple iOS 17 அப்டேட்.. அப்படி என்னதான் ஸ்பெஷல்? ஹே.. செமல்ல!
சென்னை : ஐபோன் யூசர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐஓஎஸ் 17 அப்டேட்டை விரைவில் அனைவருக்கும் கொடுக்க உள்ளது ஆப்பிள். இதில் அப்படி என்ன ஸ்பெஷலான வசதிகள் இருக்கின்றன?
உலகளவில் சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டிம் (OS) எனச் சொல்லப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் iOS 17 என்று வெளியாகவுள்ளது. இந்த புதிய ஓஎஸ்ஸில் சில முக்கியமான வசதிகள் இடம்பெறவுள்ளன.
கடந்த ஜூன் 5 அன்று நடைபெற்ற WWDC 2023 நிகழ்வின்போது iOS 17ன் டெவலப்பர்களுக்கான பீட்டா வெர்ஷனை வெளியிட்டது ஆப்பிள். செப்டம்பர் மாதம் முதல் அனைவருக்கும் ஐஓஎஸ் 17 அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் பயனாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 17 வெர்ஷனில் இடம்பெறும் சில முக்கியமான வசதிகள் & அம்சங்கள் என்ன என இங்கே பார்க்கலாம்.
வாய்ஸ் - டெக்ஸ்ட் : இன்கமிங் அழைப்புகளில்ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். மேலும், வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதைப் போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காட்டும்.
இமேஜ் கட் அவுட் : புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து உருவத்தை அப்படியே தனியாகப் பிரித்து எடுக்கலாம். அதனை வேறு புகைப்படங்கள் அல்லது பேக்ரவுண்டில் எளிதாகப் பொறுத்தும் அம்சத்தை ஆப்பிள் வழங்க உள்ளது.
போட்டோஸ் ஆப் : இப்போது ஆப்பிள் போன்களில் உள்ள போட்டோக்களில் இருக்கும் ஒரு நபரின் அத்தனை புகைப்படங்களையும் மொத்தமாக பார்க்க முடியும். ஐஓஎஸ் 17 அப்டேட்டில் இதில் செல்லப்பிராணிகள் மற்றும் இடங்களையும் சேர்க்கிறது ஆப்பிள். உங்கள் வீட்டு ஜிம்மி இருக்கும் போட்டோக்களையும் இனி ஆப்பிள் ஒரே ஃபோல்டரில் போட்டுத் தரும்.
ஃப்ரீஃபார்ம் ஆப் : வாட்டர்கலர் பிரஷ், காலிகிராஃபி பென், ஹைலைட்டர், ரூலர் போன்ற புதிய வரையும் டூல்கள் இந்த ஐஓஎஸ் 17 அப்டேட்டில் வரவுள்ளன.
நியூடிட்டி ஃபில்டர் : சென்சிட்டிவ்வான புகைப்படங்கள் திரையில் வரும்போது, 'நீங்க இந்த படத்தை கட்டாயம் பார்க்கணுமா?' என ஆப்பிள் ஒரு பாப் அப்பை திரையில் கொண்டு வரும். சென்சிட்டிவ்வான இமேஜ்களை ப்ளர் செய்தும் தரும்.
மெயில் ஆப் : மெசேஜ்களில் வரும் ஓடிபி எண்களை தேவைப்படும் இடங்களில் தானாகவே நிரப்பிக் கொள்ளலாம் என இப்போது இருக்கும் வசதி மெயிலில் வரும் ஓடிபிக்கும் ஐஓஎஸ் 17ல் கொண்டு வரப்படுகிறது.

அதோடு, ஓடிபி, வெரிஃபிகேஷன் கோடு போன்றவை வந்த மெயில்கள் ஏராளம் இருக்கும், அவற்றை நாம் அவ்வப்போது ஒவ்வொன்றாக அழிக்க வேண்டியிருக்கும். அதனையும், ஓடிபி வந்த பழைய மெயில்கள் தானாகவே அழிந்துவிடும் வகையில் செட் செய்யும் ஆப்ஷனையும் கொண்டு வருகிறது ஐஓஎஸ் 17.
ஹே சிரி வேண்டாம்.. வெறும் சிரி : ஹாலோ, ஸ்மிர்க், பீகாபூ ஆகிய மூன்று புதிய ஸ்டிக்கர்கள் ஆப்பிளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும், ஆப்பிளின் குரல் வழி உதவி சேவையான சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், வெறுமனே சிரி என்று மட்டும் கூறினால் போதும். ஒவ்வொரு முறையும் சிரி என்று சொல்லத் தேவையில்லை. அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும்.
எந்தெந்த ஐபோன்களில் ஐஓஎஸ் 17 அப்டேட் கிடைக்கும் : ஐபோன் 15 சீரிஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11, ஐபோன் XS Max, ஐபோன் XS, ஐபோன் XR, ஐபோன் SE (2022), ஐபோன் SE (2020) போன்ற ஆப்பிள் மாடல்களில் ஐஓஎஸ் 17 அப்டேட் பெற முடியும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications