தொடங்கியது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை.. இந்தியாவில் எப்படி வாங்கலாம்? நம்ம ஊரில் விலை என்ன?
சென்னை: ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 தொடரை இன்று விற்பனைக்கு கொண்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த "வொண்டர்லஸ்ட்" வெளியீட்டு விழாவில் இந்த போன் வெளியிட்டது. தற்போது இந்திய மார்க்கெட்டில் இது விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

முதல்முறையாக உலக மார்க்கெட்டில் ஐபோன் கிடைக்கும் அதே நாளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மார்கெட்டிலும் போன்கள் கிடைத்துள்ளன. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது.
ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களைத் அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கான முன்பதிவு தேதிகள் மற்றும் விலை பற்றி ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 15 தொடரை ஆர்டர் செய்வது பற்றியும், இது எவ்வளவு தொகைக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஐபோன் முன்பதிவு எப்போது தொடங்கும்?: இந்த போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 இந்தியாவில் விற்பனை தொடங்கியது: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனமானம் கூறி உள்ளது.
iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும்.
இந்த மாடல்களில் ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications