ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் வெளியீடு.. இந்தியாவில் எப்போது கிடைக்கும்? நம்ம ஊரில் விலை என்ன?
சென்னை: ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 தொடரை நேற்று நடந்த "வொண்டர்லஸ்ட்" வெளியீட்டு விழாவில் வெளியிட்டது. இதன் இந்திய விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

முதல்முறையாக உலக மார்க்கெட்டில் ஐபோன் கிடைக்கும் அதே நாளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மார்கெட்டிலும் போன்கள் கிடைத்துள்ளன. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது.
ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கான முன்பதிவு தேதிகள் மற்றும் விலை பற்றி ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 15 தொடரை ஆர்டர் செய்வது பற்றியும், இது எவ்வளவு தொகைக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஐபோன் முன்பதிவு எப்போது தொடங்கும்?: இந்த போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 இந்தியாவில் எப்போது சந்தைக்கு வரும்?: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனமானம் கூறி உள்ளது.
iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும்.
இந்த மாடல்களில் ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications