அசத்துதே ஆப்பிள்.. அட்டகாச அம்சங்களுடன் வெளியானது ஐபோன் 16 ப்ரோ! விலை தெரியுமா?
நியூயார்க் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில், ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர் பாட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆப்பிள் 16 சீரிஸின் ஐபோன் ப்ரோ 16 அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் என்ன? விலை எவ்வளவு? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் இன்று தனது ’இட்ஸ் க்ளோ டைம்’ நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்வில் ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் 18 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.
இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபோன் 16, ஐபோன் 16 மாடல்களுக்கு அடுத்தபடியாக ஐபோன் ப்ரோ மாடல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவந்த ஐபோன் மாடல்களிலேயே ஐபோன் ப்ரோ தான் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. பெசல்கள் என்றார் செல்போன் திரைக்கும், போனின் ஃப்ரேமுக்கும் இடைப்பட்ட பகுதியாகும், இதன் மூலம் போனுக்கு அட்டகாசமான லுக் கிடைக்கும்.

ஐபோன் 16 ப்ரோ டெசர்ட் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. டார்க் ப்ளாக், டார்க் சில்வர் உள்ளிட்ட 4 வண்ணங்களில் கிடைக்கும் ஐபோன் ப்ரோ, அதிகபட்ச பேட்டரி லைஃபை கொண்டுள்ளது. கடந்த 15 மாடல்களை போல இந்த போனிலும், சி டைப் சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ஐபோன் 16 மாடலில் உள்ளதை போன்று ஏ18 பிராசசர் உள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் இருந்ததை போன் ப்ளாஷுடன், 3 கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவில் 48 எம்பி பியூஷன் மெயின் கேமரா இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் 24 மில்லி மீட்டர் போக்கல் லென்த், 48 மில்லி மீட்டர் இரண்டு மடங்கு டெலி போட்டோ, ஆன்ட்டி ரெஃலெக்டிவ் லென்ஸ் கோட்டிங், , இரண்டாம் தலைமுறை சென்சார் ஷிப்ட் ஐஓஎஸ். 100 சதவீத பிக்சல் போக்கஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் 48 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மூலம் ஹைபிரிட் ஃபோக்கஸ், பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

மேலும், ஐபோன் 16 ப்ரோவில் 5x டெலிஃபோட்டோ கேமராவையும், கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டன் இடம்பெற்றுள்ளதால் ஆட்டோ ஜூம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். மேலும் இந்த போன் மூலம் 4கே 120 பிரேம் பெர் செகண்ட் வீடியோக்களையும் எடுக்க முடியும். யூடியூபர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்களுக்கு இந்த போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஆடியோ மிக்ஸ் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் நீருக்கடியிலும் ஐபோன் 16 ப்ரோ மூலம் துல்லியமாக வீடியோ எடுக்க முடியும்.
ஐபோன் 16 ப்ரோவின் விலை 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பில் 1,19,900 ரூபாய் இருந்து தொடங்குகிறது. 256 ஜிபி ப்ரோ மாடல் ரூ.1,29,900 ஆகும்.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஆனது யூஎஸ் இங்கிலீஷ் பதிப்பில் அடுத்த மாதமும், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து , தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆங்கில பதிப்புகளில் டிசம்பர் மாதமும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சைனிஸ், பிரான்ஸ், ஜாப்பனீஸ், ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications