Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பவர்ஹவுஸ்" ஐபோன் 17.. இன்னும் 4 வாரங்களில் அதிர வைக்கும்.! எப்போது முதல் ஆர்டர் போடலாம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: எப்போதும் செப்டம்பர் மாதம் நெருங்க நெருங்க ஆப்பிள் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ஏனென்றால் செப்டம்பரில் தான் ஆப்பிள் நிறுவனம் தான் புதிய ஐபோன் மாடலை வெளியிடும். இந்தாண்டு ஐபோன் 17 மாடல் வெளியாகவுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. ஐபோன் 17 எப்போது ரிலீஸ் ஆகும், அதை எப்போது ப்ரீ ஆர்டர் செய்யலாம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் என்ன தான் ஏகப்பட்ட நிறுவனங்கள் ஏகப்பட்ட செல்போன் மாடல்களை வெளியிட்டாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் மீதான மவுசு மட்டும் குறையவே இல்லை. ஆண்டுக்கு ஒரு ஐபோன் மாடல் மட்டும் வெளியிடப்பட்டாலும் கூட அதற்குத் தான் உலகெங்கும் மக்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.

Apple iPhone 17 is set to Release on September 9 Know the full schedule

ஐபோன் 17

அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடலான ஐபோன் 17 இன்னும் வெறும் நான்கு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.. ஐபோன் 17 வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிள் ரசிகர்களைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐபோன் 17 இருக்கும் என தெரிகிறது.

இதுதான் ஹைலைட்

இந்த ஐபோனின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்றாகப் புதிய iOS 26 சாப்ட்வேர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இருப்பினும், iOS 26 குறித்து இதுவரை ஆப்பிள் அதிகம் பேசவில்லை. iOS 26 சாப்ட்வேர் ஐபோன் 17 மாடல் வெளியாகும் அதில் (pre-installed) இருக்கும். இருப்பினும் ஐபோன் 11 வரை அனைத்து மாடல்களுக்கும் iOS 26 அப்டேட் மூலம் கிடைக்கும்.

iOS 26 மிகவும் சீராக உள்ளதாகவும் அது சிறப்பான ஒன்றாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி முந்தைய வெர்ஷனை பொதுமக்களால் பயன்படுத்த முடிந்தது. அதாவது ஐபோன் 16 வெளியீட்டு விழாவுக்கு ஒரு வாரம் கழித்து புது சாப்ட்வேர் அப்டேட் வழங்கப்பட்டது. இந்தாண்டும் அதேபோல ஒரு வாரம் கழித்து சாப்ட்வேர் அப்டேட் வரும் என தெரிகிறது. இது தவிர இந்தாண்டு ஐபோன் 17ல் பல அட்டகாசமான வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க இது தொடர்பான முக்கிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

எப்போது விற்பனைக்கு வரும்

இந்தாண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஐபோன் வெளியீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தான் அறிமுகப்படுத்தும். அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 9ம் தேதி இந்த புது ஐபோன் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 12ம் தேதி புதிய ஐபோன் மாடலுக்கான ப்ரீ ஆர்டர் தொடங்கும் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ம் தேதி முதல் விற்பனை தொடங்கும் எனத் தெரிகிறது.

கொஞ்சம் காத்திருங்கள்

நீங்க இப்போது ஐபோனை வாங்கலாம் என நினைத்தால் சற்று காத்திருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் புதிய மாடலை வெளியிடும்போது, அந்நிறுவனம் பழைய மாடல்களுக்கான ரேட்டை கணிசமான குறைக்கும். அத்தோடு வரும் காலத்தில் பண்டிகைக் காலச் சலுகையும் இந்தியாவில் நிறையவே கிடைக்கும். எனவே, சில வாரங்கள் கழித்து உங்களுக்குப் பிடித்த ஐபோனை நீங்கள் வாங்கினால் மிகப் பெரிய தள்ளுபடி நிச்சயம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+