கொஞ்சம் இருங்க பாய்.. அசத்துது நம்ம ஆப்பிள்! அட்டகாச அம்சங்களோடு IPHONE 17 ஏர்! லீக்கான விவரங்கள்..!
சென்னை: பல்வேறு சிறப்பம்சங்களுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் போன்கள்-ஐ அறிமுகம் செய்தது. இந்த நிலையில் அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த போன்களின் பல முக்கிய அம்சங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏர்பாட்ஸ், வாட்ச் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து செப்டம்பர் 2024ல் 16 ஆம் தேதி அன்று ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்தியது

ஆப்பிளின் அடிப்படை மாடல் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை கடந்த ஆண்டு அறிமுகமான நிலையில், பலர் அதை வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் வெளியாகி நான்கு மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் இந்த ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த ஆப்பிள் போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரிஸில் வழக்கமான ஐ போன் 17 பேஸிக் மாடல் உடன் iphone 17 ஏர், ஐ போன் 17 ப்ரோ, ஐ போன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அதனுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் 16 விட அதிக மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், புதிய வடிவமைப்பு மேம்பட்ட செயல்திறன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா தொகுதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் 17 ஏர் இதுவரை வெளியிட்ட ஆப்பிள் ஐபோன்களை விட மிகவும் வலிதான ஐபோன் மாடல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தடிமன் 6.25 மில்லி மீட்டர் இருக்கும் என தகவல்கள் உலாவுகிறது. அதனுடன் 5வது ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ப்ரோ ஆகியவையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஐபோன் 17 சற்று தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது தற்போதைய மாடல்களை விட ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகியவை மென்மையான விளிம்புகள் மற்றும் கிளாஸ் மெட்டல் இணைவு மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 ஏர் மாடல்களில் 24 எம்பி பிரண்ட் கேமரா, 48 எம்பி சிங்கிள் லென்ஸ் பின்புற கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17ல் பின்புற கேமரா 48 எம் பி யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகிய கூடுதல் அம்சங்கள் இருக்கும் என கூறுகின்றனர் டெக் வல்லுநர்கள்.
இந்தியாவில் ஐபோன் 17 சுமார் 80,000 ரூபாய் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஐபோன் 17 ஏர் கூடுதல் அம்சங்கள் காரணமாக 90 ஆயிரத்திலிருந்து விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஐபோன் 17 மாடல்கள் வெளியாகலாம் என உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications