ரூ.4.5 லட்சம் ஐபோன் டியோ.. இந்தியாவில் வெறும் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக அறிவிப்பு.. விவாதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ (iPhone Duo), இன்ஸ்டன்ட் டெலிவரி தளமான பிளிங்இட்ல் விற்பனைக்கு வந்த ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இந்தத் தகவலை பிளிங்இட் நிறுவனத்தின் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேநேரம் எத்தனை யூனிட்கள் விற்பனைக்கு வந்தன உள்ளிட்ட தகவல்களை அவர் பகிரவில்லை.

உலகிலேயே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் கம்பெனி என்றால் அது ஆப்பிள் தான். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வரும் ஸ்மாட்ர்போனுக்கு உலகெங்கும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தாண்டும் கூட ஆப்பிள் அட்டகாசமான செல்போன்களை கொண்டு வந்தது. முதல்முறையாக மடிக்கக்கூடிய ஐபோன் டியோவையும் அறிமுகப்படுத்தியது.

Apple iphone iphone duo

விற்று தீர்ந்தது

இதற்கிடையே இன்று வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு டெல்லி பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஐபோன் டியோ விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக அல்பிந்தர் திண்ட்சா குறிப்பிட்டுள்ளார். விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாகவும், வரும் வாரங்களில் கூடுதல் ஸ்டாக்கை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள்

ஆனால், பிளிங்இட் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போன்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து, எக்ஸ் தளத்தில் பலரும் உண்மையில் எத்தனை போன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன என்று கேள்வி எழுப்பினர். நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக, "எத்தனை யூனிட்கள் உண்மையில் விற்றன? 2 அல்லது 5? ஆப்பிள் நிறுவனமே தனது டியோ போன்களுக்கு போதிய வரவேற்பு இல்லை ஒப்புக்கொண்டுள்ள நிலையில்.. ஓரிரு செல்போன்களை மட்டுமே விற்றுவிட்டு, காலியாகிவிட்டது என சொன்னால் எப்படி" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொரு நபர், "இந்தியாவில் இதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தாலும், சில நிமிடங்களில் விற்று தீரத்தான போகிறது. இதை 10 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தாதது ஆப்பிள் செய்த பெரிய தவறு. அப்படி விலை நிர்ணயித்திருந்தாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்திருக்கும்" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "இதன் மூலம் நாம் பணக்கார நாடு என்பது தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஐபோன் டியோ

ஐபோன் டியோ இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. இதையொட்டி, டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் குவிந்தனர்.

இந்த ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் அளவிலான மடிக்கக்கூடிய உள் திரையும், மடிக்கும்போது பயன்படுத்தக்கூடிய 5.4 இன்ச் வெளிப்புற திரையும் இடம்பெற்றுள்ளன. புதிய A20 Pro சிப் மூலம் இயங்கும் இந்த போனில், 48 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. டைட்டானியம் ஃப்ரேம் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், நான்கு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது.

விலை என்ன

இந்தியாவில் 256GB மாடல் ரூ.2,99,900க்கும், 512GB மாடல் ரூ.3,24,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1TB மாடலின் விலை ரூ.3,74,900க்கும் விற்கப்படுகிறது. அதேபோல 2TB மாடல் விலை அதிகபட்சமாக ரூ.4,49,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் பிளிங்இட் தளத்தில் சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக வெளியான தகவல், சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்த யூனிட்களின் எண்ணிக்கை தெரியாததால், அதுவே விவாதமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+