எமோஜி, மீம்ஸ்களை நீங்களே உருவாக்கலாம்! ஐபோன் + AI என்னவெல்லாம் செய்யப்போகிறது தெரியுமா?
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவை (AI) ஐபோன்களில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆப்பிள் அறிவித்துள்ளது. AI அல்லாத ஸ்மார்ட்போன்களை படிப்படியாக அகற்றப்போவதற்கான அடித்தளமாக இது பார்க்கப்படுகிறது. iOS 18 அப்டேட் வரும்போது செயற்கை நுண்ணறிவு வசதிகள் அறிமுகமாக உள்ளன. சாம்சங் மற்றும் இதர போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தர ஏஐ தொழில்நுட்பம் உதவும் என்று ஐபோன் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிளின் AI வசதி, "ஆப்பிள் நுண்ணறிவு" என்று அழைக்கப்படப்போகிறதாம். பயனுள்ள மற்றும் பொருத்தமான தகவலை ஐஏ வசதியுடன் ஆப்பிள் வழங்கப்போகிறது. சாட்ஜிபிடியுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு வசதிகளை தர இருந்தாலும் கூட, சிறப்பு கிளவுட் அடிப்படையிலான ஆப்பிள் சேவையகங்களில் இதை செயல்படுத்துவதால் பிரைவசி பாதிக்கப்படாது என்று ஆப்பிள் தெரிவிக்கிறது.

ஆப்பிளின் சொந்த ஐஏ வசதிகள் போதிய தரத்தில் இல்லை. கால் டாக்சியை முன்பதிவு செய்தல் அல்லது நிகழ்நேர ட்ராஃபிக் அப்டேட் வழங்குதல் போன்ற சில பணிகளுக்கு பழை சாட்போட்கள் பயனுள்ளதாக இல்லை. எனவே சாட்ஜிபிடியை சார்ந்திருக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் வாய்ஸ் உதவியாளரான Siri-யின் புதிய அப்டேட்டில் ChatGPT ஐ ஒருங்கிணைத்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பால், பயனர்கள் மிகவும் இயல்பான உரையாடல்களை மேற்கொள்ள முடியும். ரொம்பவே சுத்தமான வார்த்தைகளை போட்டுதான் சிரி உதவியை தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது இயல்பான வார்த்தைகளில் கேட்டால் கூட சிரி உதவி செய்யும்.
ஆப்பிள் ஐபோனில் 15ப்ரோ செல்போன்களில்தான் இந்த வசதி கிடைக்கப்போகிறது. ஆனால் இலவசமாக ஐஏ சேவைகளை ஐபோன் வழங்கும். இதனால் தனது லேட்டஸ்ட் மாடல் செல்போன் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று ஆப்பிள் நினைக்கிறது. 2020க்கு பிறகான ஐமேக்களிலும் வசதி கிடைக்கும்.
நமது தேவைக்கு ஏற்ப எமோஜி கிரியேட் செய்வது, நமது கையால் வரைந்த கிறுக்கலான ஓவியங்களை படமாக மாற்றுவது, ஒரு படத்தை ஐஏ மூலம் உருவாக்கி நண்பர்களுக்கு சோஷியல் மீடியாவில் அதை பதிலாக அனுப்புவது, நமது கேலரியிலுள்ள போட்டோக்களை கீவேர்ட் வைத்து தேடினால் கொண்டுவந்து கண்முன் நிறுத்துவது, நோட்பேடில் பதிவு செய்யும் ரெக்கார்டர்களை சம்மரைஸ் செய்து முக்கிய பகுதிகளை நமக்கு பிரித்து எடுத்து தருவது என ஐஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல விஷயங்களை தர உள்ளது ஆப்பிள். ஐஓஎஸ் 18 அப்டேட் இன்னும் சில மாதங்கள் கழித்து வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications