அமெரிக்காவில் தான் ஐபோன் 16 கம்மி.. இந்தியா, துபாயில் ரேட் எவ்வளவு! எங்கே ரொம்ப காஸ்ட்லி தெரியுமா
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 16 ப்ரோ மாடல்களை வெளியிட்டுள்ளன. ஐபோன்கள் எப்போதும் உலகெங்கும் ஒரே நாளில் கிடைக்கும் நிலையில், எந்த நாட்டில் ஐபோன் 16 ப்ரோ குறைவான விலைக்குக் கிடைக்கும். எந்த நாட்டில் அதிக விலைக்குக் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மற்ற செல்போன் நிறுவனங்கள் ஆண்டுக்குப் பல மாடல்களை வெளியிட்டாலும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது மட்டுமே அனைவரது பார்வையும் இருக்கும்.

ஐபோன் 16: ஆண்டுக்கு ஒரு மாடலை மட்டுமே வெளியிட்டாலும் உலகமே எதிர்பார்க்கும் மாடலாக ஐபோன் 16 இருந்து வருகிறது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இப்போது ஐபோன் 16 வரிசையில் 4 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்று 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நான்கு மாடல்களும் சில நாட்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் பேஸ் 128ஜிபி வேரியண்ட் விலை ரூ. 79,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 256ஜிபி மற்றும் 512ஜிபி வேரியண்ட் முறையே ரூ. 89,900 மற்றும் 1,09,900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் 16 ப்ளஸ் 128 ஜிபி மாடலுக்கு ரூ. 89,900ஆகவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ. 99,900 ஆகவும் 512ஜிபி வேரியண்ட் ரூ. 1,19,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் 16 ப்ரோ பேஸ் வேரியண்ட் ரூ.1,19,900ஆகவும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் பேஸ் வேரியண்ட் ரூ.1,44,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ: ஆப்பிள் நிறுவனம் தனது மாடல்களை உலகெங்கும் விற்பனை செய்யும் நிலையில், வரி, போக்குவரத்திற்கு ஆகும் தொடங்கி பல்வேறு காரணங்களால் அதன் விலை ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். ஐபோன் 16 ப்ரோ எந்த நாட்டில் விலை குறைவு. எந்த நாட்டில் விலை அதிகம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எங்கே விலை குறைவு: இதற்கு நாம் ஐபோன் 16 ப்ரோ மாடலில் பேஸ் வேரியண்ட் ஆன 128 ஜிபி மாடலை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி இந்த ஐபோன் 16 ப்ரோ மாடல் அமெரிக்காவில் தான் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. 128 ஜிபி வேரியண்ட் அமெரிக்காவில் 999 டாலர் (ரூ.82,800) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அது ஜப்பானில் தான் குறைவாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் ¥159,800 (ரூ 89,300) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் ஒன்றான சீனாவில் 128 ஜிபி வேரியண்ட் ¥ 7,999க்கும் (ரூ. 91,000), ஹாங்காங்கில் இது HK$8,599 (ரூ 91,100)க்கு விற்பனையாகிறது.
ஐக்கிய அமீரகம்: ஐக்கிய அமீர நாடுகளில் ஒன்றான துபாயில் இது 4,299 திராம் (ரூ.97,200) க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்த நாடுகளில் மட்டுமே ஐபோன் 16 ப்ரோவை வாங்க முடியும்.
இந்தியாவில் காஸ்ட்லி: வியட்நாம் நாட்டில் தான் ஐபோன் 16 ப்ரோ ஒரு லட்ச ரூபாய் மார்க்கை தாண்டுகிறது. வியட்நாம் நாட்டில் இது 28,999,000 VND (ரூ 1,00,400)க்கு விற்பனையாகிறது. அதேபோல பிரிட்டன் நாட்டில் 999 பவுண்டாக (₹1,02,300) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்தையும் விட காஸ்ட்லியாக இந்தியாவில் அதன் பேஸ் வேரிண்ட் ₹1,19,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications