ஆண்ட்ராய்டு போனில் நுழையும் ஆப்பிள்? இனி விளம்பரங்கள் எல்லாம் கூட வருமே.. ஏன் இந்த திடீர் முடிவு?
வாஷிங்டன்: இந்தகாலத்தில் நாம் வெளியே சென்றால் மேப் செயலி இல்லாமல் எங்கும் போக முடியாது. புதிதாக செல்லும் ஊர்களுக்கு கூட மேப் பெரும்பாலும் சரியாகவே வழி காட்டும். இதனால் மேப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மேப் செயலியிலும் கூட சீக்கிரமே விளம்பரங்கள் வரவுள்ளதாம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
செல்போனில் நமக்கு மிகவும் பயன்படும் செயலி என லிஸ்ட் போட்டால் அதில் மேப்பிற்கு முக்கிய பங்கு இருந்தே தீரும். அதிலும் நீங்கள் பயணங்களை விரும்பும் நபராக இருந்தால் மேப் செயலியின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருப்பீர்கள்.

சில நேரங்களில் மேப் தப்பாக ரூட் காட்டும் என்றாலும் பெரும்பாலான காலம் மேப் செயலி நமக்கு கை கொடுக்கவே செய்யும். இதற்கிடையே உலகெங்கும் டெக் பிரியர்கள் கொண்டாடும் நிறுவனமாக உள்ள ஆப்பிள் தனது மேப் செயலியில் விளம்பரங்களைக் காட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
ஆப்பிள் மேப்ஸ்
அதாவது மேப் செயலியில் விளம்பரங்களை காட்டி அதன் மூலம் வருவாய் ஈட்ட ஆப்பிள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஆப்பிள் நிறுவனம் மேப் செயிலியில் இதுபோன்ற முயற்சிகளை செய்வது இது முதல்முறை இல்லை. கடந்த 2022ம் ஆண்டிலேயே மேப் செயலியில் விளம்ரங்களை கொண்டு வர ஆப்பிள் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இருப்பினும், சில காரணங்களால் அந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் விளம்பரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மேப்ஸ் டீமுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது தான் விளம்பரங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேநேரம் இதற்கான தொழில்நுட்ப வேலைகள் நிறைய இருப்பதால் விளம்பரங்கள் வர மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது.
ஏன் இந்த முடிவு
வழக்கமான பேனர் விளம்பரங்களை போல இல்லாமல் கூகுள் மேப்பில் சேர்ச் அடிப்படையிலான விளம்பரங்களை காட்டவே ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதாவது யூசர் எதாவது தேடும்போது டாப்பில் வர நிறுவனங்கள் பணம் செலுத்தலாம். உதாரணமாக யூசர் ஒருவர் பர்கர் என தேடுகிறார் என்றால்.. குறிப்பிட்ட கடையின் தகவல்கள் மேலே டாப்பில் வர அவர்கள் கட்டணம் செலுத்துவார்கள்.. திட்டப்படி ஆப்பிள் நிறுவனம் இந்த விளம்பர திட்டத்தை அமல்படுத்தினால் அவர்களின் வருவாய் கணிசமாக அதிகரிக்கவே செய்யும்.
ஆண்ட்ராய்டு செயலி
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆப்பிள் மேப்ஸ் செயலி இப்போது ஐபோன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு யூசர்களும் பயன்படுத்தும் வகையில் கூகுள் மேப்ஸின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை சீக்கிரமே ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் மேப்ஸால் அதிகப்படியான யூசர்களை சென்றடைய முடியும். இந்த நேரத்தில் விளம்ரபங்களையும் கொண்டு வந்தால் அது கூகுள் மேப்ஸுக்கு கடும் போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டியது
நாம் இங்கு மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது ஆப்பிள் மேப்ஸ் என்ன தான் விளம்பரங்கள் குறித்து இப்போது தான் ஆலோசிக்கிறது என்றாலும் கூகுள் மேப்ஸில் ஏற்கனவே பல காலமாக விளம்பரங்கள் வருகிறது. உற்று கவனித்தால் மட்டுமே அவை விளம்பரங்கள் என புலப்படும் அளவுக்கு அவை நுட்பமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications