ஸ்டைலை மாற்றும் ஆப்பிள்.. இனிமேல் A to Z எல்லாமே வந்து குவிய போகுது.. ரசிகர்கள் குஷியோ குஷி

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ம் தேதி தனது புதிய சாதனங்களை வெளியிட உள்ளது. ஐபோன் தொடங்கி வாட்ச், ஏர் பாட் என பல சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளது. அதேநேரம் ஆப்பிள் நிறுவனம் வரும் காலங்களில் மடிக்கக்கூடிய ஐபோன் உட்பட பல்வேறு புதிய சாதனங்களையும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஐபோன்களில் கவனம் செலுத்தி வருகிறது. இது தவிர ஆப்பிள் வாட்ச், ஏர்பாட் என சமீபத்திய ஆண்டுகளில் வெகு சில புதிய சாதனங்களையே ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தொடர்ந்து புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் சூழல் இல்லை. ஆனால், இந்த நிலை விரைவில் மாற போகிறதாம்!

Apple iPhone India

ஆப்பிள்

வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் "Surprise and Shine" நிகழ்ச்சியில் புதிய தலைமை செயல் அதிகாரி ஜான் டெர்னஸ், புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளார். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என கூறப்படுகிறது. வரும் காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக பெரிய அளவில் புதிய சாதனங்கள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய சாதனங்களுக்கான தயாரிப்பு பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து ஆப்பிள் தரப்பில் கூறுகையில், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அடுத்த வாரம் நடைபெறும் நிகழ்ச்சி மிக சிறப்பாக இருக்கும். ஆனால், அதன் பிறகும் பல சாதனங்கள் வரவுள்ளன. அனைத்திற்கும் தயாராக இருங்கள்" என்று கூறியிருந்தார்.

மிக முக்கியமான சாதனம்

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள சாதனங்களில் முக்கியமானதாக மடிக்கக்கூடிய அதாவது foldable ஐபோன் இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இதற்கு ஐபோன் அல்ட்ரா என பெயர் வைக்கும் என தெரிகிறது. மடிக்கும்போது பாஸ்போர்ட் அளவில் இருக்கும் இந்த போனில் பெரிய உள்புற திரை மற்றும் சிறிய வெளிப்புற திரை இருக்கும்.

A20 Pro சிப், ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த C2 மோடம், டச் ஐடி, மல்டி டாஸ்கிங் என பக்காவாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கேமராவுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு இருக்குமாம். அதேநேரம் இதில் டெலிபோட்டோ கேமரா இருக்காது என கூறப்படுகிறது. இதன் விலை 2,000 டாலருக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 18 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் 12

ஐபோன் 18 Pro மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முந்தைய மாடலின் டிசைனயே தக்க வைத்து கொள்ளுமாம். லைட் ப்ளூ மற்றும் டார்க் ரெட் ஆகிய கலர்கள் புதிதாக வரலாம். A20 Pro சிப், C2 மோடம், மேம்படுத்தப்பட்ட பேட்டரி, சிறந்த கூலிங் சிஸ்டம் இடம்பெறலாம். ஐபோன் ப்ரோ மேக்ஸ் 18 மாடலில் ஒளியின் அளவை துல்லியமாக கட்டுப்படுத்தும் mechanical aperture வழங்கப்படலாம்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4

அதேபோல ஆப்பிள் வாட்ச் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 மாடல்களில் புதிய கலர்கள், செராமிக் கேஸ் மற்றும் புதிய ஹெல்த், ஃபிட்னஸ் அம்சங்கள் இடம்பெறலாம். மேலும், சிரி ஏஐ உடன் மாற்றி அமைக்கப்படும். நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும் ஹார்ட் ரேட் சென்சார் ஒன்றையும் ஆப்பிள் பரிசோதித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஏர்பாட்ஸ் 5, ஆப்பிள் டிவி ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும். அதிலும் குறிப்பாக ஆப்பிள் டிவியில் வேகமான சிப் மற்றும் சிரி ஏஐ ஆகியவை இருக்கும். ஹோம்பாட் மினி (HomePod mini) சாதனத்திலும் வேகமான பிராசசர் இருக்குமாம். OLED திரையுடன் புதிய ஐபேட் மினி சாதனமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+