இது வெறும் Smart Watch இல்ல.. Apple Watch Series 12, Ultra 4ல் சூப்பர் வசதி! பேசும் போதே Live Rewind
சென்னை: கலிபோர்னியாவின் ஆப்பிள் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் சீரிஸ் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச்கள் போல் அல்லாமல் அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவும் வகையில் பல முக்கிய வசதிகளை இதில் அப்டேட் செய்திருக்கிறது ஆப்பிள்.
குறிப்பாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா4 மாடல்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆம்புலன்ஸ் சத்தத்தை கண்டறிவது, தனிப்பட்ட உடல்நல தகவல்களை வழங்குவது போன்ற அதிநவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு புதிய அம்சம் லைவ் ரிவைண்ட் அதாவது நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்ன சில வார்த்தைகளை நாம் தவற விட்டுவிட்டால் கடந்த 15 வினாடிகளில் நடந்த உரையாடல்களை மீண்டும் கேட்க உதவும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு நீங்கள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கும்போது உங்கள் மேனேஜர் ஒரு வார்த்தையை கூறுகிறார். அதை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றால் அந்த மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்பதை நீங்கள் இதில் டெக்ஸ்ட் ஆக பார்க்க முடியும். இதனால் முக்கியமான தகவல்களை கூறும்போது அதில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து சரி பார்க்கலாம்.
அது மட்டும் அல்லாமல் சுற்றுப்புறத்தில் சத்தம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த ரீவைண்ட் வசதி மூலம் பேசப்படும் வார்த்தைகளை நீங்கள் எழுத்துக்களாகவே பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸில் சவுண்ட் ரெககனைசேஷன் என்ற வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலிகளை இந்த வாட்ச் தானாகவே அடையாளம் கண்டு கொள்ளும்.
குறிப்பாக ஆம்புலன்ஸ் சத்தம், போலீஸ் சைரன், நெருப்பு அலாரம், வீட்டின் காலிங் பெல், குழந்தைகள் அழும் சத்தம் போன்ற ஒலிகளை இந்த வாட்ச் கண்டறிந்து கொள்ளும். இதில் மற்றொரு சிறப்பு மற்றும் இருக்கிறது இந்த வசதிகளை பயன்படுத்த உங்களது ஐபோன் உங்கள் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஐபோன் பக்கத்தில் இல்லாவிட்டாலும் இந்த வாட்ச் தானாகவே ஒலிகளை அடையாளம் காணும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அவசர காலங்களில் சத்தங்களை எளிதில் கவனிக்க முடியாமல் போபவர்களுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.
அட்டகாசமான மற்றொரு அப்டேட்டும் இந்த வாட்ச் சீரியஸ் களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சிரி ரீகேப். அதாவது சுற்றுப்புறத்தில் நடைபெறும் உரையாடல்களில் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முக்கிய விஷயங்களை சுருக்கமாக இது ஒரு மெசேஜ் போல தொகுத்து கொடுக்கும். இந்த வசதியோடு பிரைவசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சிரி ரீகேப் வசதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த வசதிக்காக நீங்கள் பேசும் ஒரிஜினல் ஆடியோக்களை இந்த வாட்சுகள் சேமித்து வைக்காது. இதன் மூலம் பயனர்களின் தனியுரிமைக்கு ஆப்பிள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.லைவ் ரிவைண்டு மற்றும் சிரி ரிகேப் ஆகிய வசதிகள் உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது. 2026 ஆம் ஆண்டு கடைசி பகுதியில் பீட்டா வடிவில் இந்த அப்டேட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 ஆகிய மாடல்களில் ஹெல்த் சென்சார் சிஸ்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஈசிஜி மற்றும் ஆப்டிகல் சென்சார்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பெரிய க்ரீன் எல்இடி மற்றும் Ring-shaped Photodiodes ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உடல்நலம் தொடர்பான அளவீடுகளை இன்னும் துல்லியமாக பெற முடியும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
