ஐபோன் 15 யூசர்களை சூடாக்கிய ‘ஓவர் ஹீட்’ பிரச்சனை.. ஆப்பிள் எடுக்கும் அதிரடி முடிவு! விலை எகிறுமா?
சென்னை: ஐபோன் 15 சீரிஸ், மிகுந்த வரவேற்புக்கு இடையே வெளியான நிலையில் யூசர்கள் ஒரு பெரிய சிரமத்தை எதிர்கொண்டனர். அந்த பிரச்சனை அடுத்தடுத்த மாடல்களில் இருக்கவே கூடாது எனக் கருதியுள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய உள்ளதாம்.
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன் 15 சீரிஸை அறிமுகம் செய்தது. பலரும் அடித்துப் பிடித்து ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களை வாங்கினர். ஆனால், யூசர்கள் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் அதிகமாக போன் சூடாகும் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆப்பிள் யூசர்கள் பலர், தெர்மோமீட்டரை, போனில் வைத்து வெப்பநிலையை காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

ஐபோன் 15 ப்ரோ போன்கள் அதிகம் சூடாவதாக யூசர்கள் மத்தியில் புகார்கள் எழுந்த நிலையில், இது சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் சரி செய்யப்படும் என ஆப்பிள் அறிவித்தது. அதன்படியே அடுத்த அப்டேட்டில் ஓவர்ஹீட்டிங் பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த அப்டேட்டால், போனின் பெர்பார்மன்ஸ் பாதிக்கப்படுமா என்று யூசர்கள் மத்தியில் ஐயம் எழுந்தது. ஆனால், அதுபோன்ற எந்த பிரச்சனையும் வராது என ஆப்பிள் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரவுள்ள ஐபோன் மாடல்களில் இதுபோன்ற சூடாகும் பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது என்பதற்காக ஐபோன் டிசைனில் மாற்றங்களை செய்யவும் புதிய மெட்டீரியலை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாம் ஆப்பிள் நிறுவனம். அதன்படி ஐபோன் 16 சீரிஸ் போன்களின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கிராபீனையும் (graphene) உலோக பேட்டரி கேஸையும் பயன்படுத்த உள்ளது.
சமீப காலமாக ஆப்பிள் ப்ரிமியம் மாடல் போன்களின் தரம் குறித்த கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. ஐபோனின் உள்ளே ஏற்படும் வெப்பத்தை குறைக்க பல வழிகளை முயற்சித்து பார்த்து வருகிறது ஆப்பிள். அதன் ஒரு பகுதியாக ஹார்ட்வேர் தயாரிப்பு பொருட்களை மாற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தால் செல்போன் உற்பத்தி துறையில் மிகப்பெரிய புரட்சியை இது ஏற்படுத்தும்.
எனினும் இதன் காரணமாக தயாரிப்பு விலை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிக விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஐபோனின் விலை இன்னும் கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். ஐபோன் 15 மாடல்களில் போன் சூடாகும் பிரச்சனைகளை சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் சமாளித்துவிட்டாலும், அடுத்து வரவுள்ள மாடல்களில் முன்கூட்டியே இந்த பிரச்சனை தவிர்க்க முயல்கிறது ஆப்பிள்.
ஐபோன் 16 மாடல்களில் போன் சூடாகும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஹார்டுவேர் மாற்றம் மூலம் தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆப்பிள் ஈடுப்பட்டுள்ளது. ஐபோன் 16 மொபைல்களில் வெப்பத்தைக் குறைக்கும் திறனை ஏற்படுத்த கிராபீன் ஹீட் சிங்க் மற்றும் மெட்டல் பேட்டரி கேஸ் ஆகியவற்றை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐபோன்களில் விசிறி போன்ற எதையும் பயன்படுத்தி வைப்பத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இட வசதி இருக்காது. எனவே மொபைல் சூடாகாமல் இருக்க வெளிப்புறக் காற்றையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்நிலையில், ஹீட் சிங்க்களை பயன்படுத்துவது சரியாக இருக்கும். அவை மிகவும் திறமையான வெப்பம் கடத்தும் திறனைக் கொண்டிருப்பதால், அவை வெப்பத்தை அகற்றும். தற்போது உள்ள குளிரூட்டும் முறையை விட கிராபீன் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்த கிட்டத்தட்ட இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், ஆப்பிள் போன் யூசர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஆப்பிள் முயற்சிக்கும், கிராஃபீன் தெர்மல் சிஸ்டம், போன் சூடாகும் பிரச்சனையை தடுத்து, யூசர்களை கவருமா, விலையும் ரொம்பவே எகிறாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications