பென்ஷன்.. ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நிராகரிப்பா? ஈஸியா சிக்கலை சரி செய்யலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்துக்கு செல்லாமல், பயோமெட்ரிக் மூலம் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் பெறலாம்.. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கக்கூடிய வழிமுறைகள் பல உள்ளன.. எனினும், சில ஓய்வூதியதாரர்களுக்கு, சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ்கள் வந்துவிடுவதால், அது பல குழப்பத்தை தந்துவிடுகின்றன.. இதை எப்படி சரி செய்வது? இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

DLC எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் ஓய்வூதிய சலுகைகளை பெறுவதற்கு தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆயுள் சான்றிதழ் ஆவணமாகும். பயோமெட்ரிக் இயக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான ஆயுள் சான்று.

ஓய்வூதிய பணம் தவறாக பயன்படுத்தப்படுவதையும், மோசடிகளையும் தடுப்பதற்காக, ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகள் (PDAs) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன்பு இந்தச் சான்றிதழை சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பென்ஷன் - ஆயுள் சான்றிதழ்

பென்ஷன் பெறுவோர் ஒவ்வொரு நவம்பர் மாதங்களில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.. 80 வயதுக்கு மேற்பட்ட அதிமூத்த குடிமக்களுக்கு அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை சமர்ப்பிக்க அவகாசம் உண்டு. அப்படி சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதிய பலனை அவர்கள் இழக்கக்கூடும்.

நவம்பர் மாதம் நடந்துவரும் நிலையில், வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு நேரடியாக சென்று சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பொதுச் சேவை மையத்திற்கு (CSC) நேரில் சென்றும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ்அல்லது ஓய்வூதியதாரர்கள் வீட்டு வாசலில் சேவை (Doorstep Banking) மூலம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பயோமெட்ரிக் முறையிலும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் பேமேண்ட் வங்கி ஊழியர்களிடம் விவரங்களை சொல்லி சமர்ப்பிக்கலாம். இதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்தாலே போதும்.

அல்லது https://jeevanpramaan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் சான்றிதழை சமர்ப்பிக்கலாம், விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்,. UMANG செயலியிலும், சான்றிதழை பெறலாம். 'Jeevan Pramaan' என்ற செயலிக்குள் நுழைந்து, 'Generate Life Certificate' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, சான்றிதழை பெறலாம்.

ஆதார் பயோமெட்ரிக்

இதில், ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் மூலம் வாழ்நாளை சமர்ப்பித்தாலும், சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வருகிறதாம்.. இதனால் ஓய்வூதியதாரர்கள் குழப்பமடைகிறார்கள்.. எதனால் சான்றிதழ் நிராகரிக்கப்படுகிறது? இதை எப்படி சரிசெய்வது என்பது தெரியாமலும் பதற்றமாகிறார்கள்.

பெரும்பாலும், தவறான PPO நம்பர், வங்கிக் கணக்கு அல்லது கருவூல விவரங்கள் இருப்பதும், ஆதாருடன் பெயரோ அல்லது பிறந்த தேதியோ பொருந்தாமல் இருப்பதும் சான்றிதழ் நிராகரிக்க காரணங்களாக இருக்கலாம். அல்லது கைரேகைகள் தெளிவின்றி இருப்பது, பயோமெட்ரிக் பதிவு தரம் குறைவு, தவறான ஓய்வூதிய தகவல், நெட்வொர்க் சிக்கல்களில் பிழை போன்ற காரணங்களாலும் ரிஜெக்ட் ஆகலாம்.

நிராகரிக்கப்பட்டால்?

ஒருவேளை உங்கள் DLC நிராகரிக்கப்பட்டால், ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டும்... அதேபோல சரியான தனிப்பட்ட விவரங்கள் குறிப்பாக ஆதார் அட்டையுடன் சரியாக பொருந்தக்கூடிய விவரங்களை உள்ளிட வேண்டும்.. துல்லியமான PPO, ஓய்வூதிய வகை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும்.

அதேபோல கைரேகைகள் பலவீனமாக இருந்தால், கண் கருவிழி ஸ்கேன் (Iris Scan) வசதியை பயன்படுத்தலாம்.. ஒருவேளை தவறான விவரங்களை பதிவிட்டிருந்தால், மறுபடியும் DLCயை உருவாக்கலாம் என்று ஜீவன் பிரமாண் தளத்தின் FAQ-கள் பரிந்துரை செய்கின்றன. எனினும், மறுமணம் செய்து கொண்ட அல்லது மீண்டும் பணியில் சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு DLC வசதி இல்லை என்பதால், அவர்கள் தங்கள் PDAக்கு நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+