எலான் மஸ்கால் கூட செய்ய முடியாதது! ரெடியாகும் பிரம்மாண்ட பிளான்.. விண்வெளியில் நடக்கும் மேஜிக்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி என்ற நிறுவனம் நேரடியாக சாட்டிலைட் மூலம் செல்போனுக்கு இணைய வசதியைக் கொடுக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஆசிய மார்க்கெட்டை குறிவைத்து இந்த திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். இது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேவைக்கு கடும் சவால் அளிப்பதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலத்தில் விண்வெளி சார்ந்த ஆய்வு மற்றும் பிஸ்னஸ்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமே அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறது. இதற்கிடையே எலான் மஸ்கிற்கு செக் வைக்கும் வகையில் மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் களத்தில் குதித்துள்ளது.

நேரடியாக செல்போனுக்கு சேவை
அதாவது எந்தவொரு டவரும் இல்லாமல் நேரடியாக செல்போனுக்கு இணையச் சேவை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குக் கூட இணைய அணுகலை வழங்க முடியும். இணைய அணுகல் இல்லாமல் பல்வேறு நாடுகள் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், அந்த டிஜிட்டல் பாகுபாட்டை இது முடிவுக்குக் கொண்டு வரும் என்றே அந்நிறுவன ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்காகக் கடந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இந்த ஏஎஸ்டி நிறுவனம் 5 சாட்டிலைட்களை அனுப்பின. இந்த சாட்டிலைட்கள் ஒவ்வொன்றிலும் 700 சதுர அடியில் ஒரு மிகப் பெரிய ஆண்டனா இருக்கும். விண்வெளியில் சுற்றி வரும் இந்த சாட்டிலைட்கள் நேரடியாக இணையச் சேவையை வழங்குகிறது. இந்த ஆண்டனாக்களை ஏற்கனவே 2,400 சதுர அடிக்கு மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. அடுத்து அனுப்பும் சாட்டிலைட்களில் ஆண்டனா 2,400 சதுர அடியைக் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்லிங்க்
இதன் மூலம் வெறும் 90 சாட்டிலைட்கள் இருந்தாலே உலகெங்கும் கவரேஜ் தர முடியும். மறுபுறம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு சுமார் 7100+ சாட்டிலைட்கள் தேவைப்படுகிறது. அமேசான் நிறுவனம் குய்பர் நிறுவனமும் இதை முயலும் நிலையில், அவர்களுக்கு 3,200 சாட்டிலைட்கள் தேவைப்படுகிறது. ஆனால், ஏஎஸ்டி வெறும் 90 சாட்டிலைட்களை கொண்டு இதைச் சாத்தியமாக்குகிறது. அதிலும் 60 சாட்டிலைட்களை அடுத்தாண்டு இறுதிக்குள் வானில் ஏவத் திட்டமிட்டுள்ளனர்.
வேறுபாடு என்ன
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமும் இதே சேவையைத் தானே வழங்குகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஸ்டார்லிங்க் சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவையை வழங்கினாலும் கூட அதை நேரடியாக செல்போனுக்கு பயன்படுத்த முடியாது. ஸ்டார்லிங்க் இணையத்தைப் பெற ஒரு ரிசீவர் வைக்க வேண்டும். அதாவது வீட்டில் ஃபைபர் நெட் இருப்பது போல நிலையான இடத்தில் மட்டுமே ஸ்டார்லிங்கை பயன்படுத்த முடியும். ஸ்டார்லிங் செல்போனில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், அது பெரியளவில் விரிவுபடுத்தவில்லை.
கட்டணம் எவ்வளவு!
மேலும், ஸ்டார்லிங்கிற்கு தொடக்கக் கட்டணம் 350 டாலர் (சுமார் ரூ.30,000).. பிறகு மாத கட்டணம் 80 டாலர் (சுமார் ரூ.7,000) செலுத்த வேண்டும். இது வளரும் நாடுகளில் உள்ளவர்கள் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. மறுபுறம் ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களைக் குறிவைத்து ஏஎஸ்டி நிறுவனம் மலிவான விலையிலேயே தனது திட்டத்தை லான்ச் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
அதாவது அதிக கட்டணம் செலுத்தக்கூடிய ஐரோப்பிய, அமெரிக்க யூசர்களுக்களு பதிலாக ஆசிய, ஆப்பிரிக்க மார்க்கெட்டை இந்த நிறுவனம் குறிவைக்கிறது. அதிக பேர் தங்கள் நெட்வொர்க்கில் வந்தால் வருமானம் அதிகரிக்கும் என்பதே இவர்களின் திட்டமாகும். இதற்கு எந்தளவுக்குப் பலன் கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications