ஐ போனை விடுங்க.. பட்ஜெட்ல இவ்வளவு செம்மயா போன் கிடைச்சா மிஸ் பண்ணுவீங்களா? அசத்தலான Vivo V29e மாடல்!
சென்னை: ஆப்பிள் நிறுவனம் ஒருபக்கம் ரூ. 2 லட்சம் வரை விலை வைத்து ஐ போன் 15 Pro Max உள்ளிட்ட மாடல்களை களத்தில் இறக்கியுள்ள நிலையில், Vivo நிறுவனத்தின் V29e மிட் ரேஞ்ச் விலை மாடல் செம ஸ்டைலிஷாக சத்தம் இன்றி மாஸ் காட்டி வருகிறது.
இந்தியாவில் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு நிறுவனங்கள் புதிதாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில் விவோ நிறுவனம் தனது புதிய Vivo V29e 5G ஸ்மார்ட்போனை களத்தில் இறக்கியுள்ளது. இந்த மாடல், ஸ்டைலிஷ் வடிவமைப்புடன் வெளியாகி மிட் ரேஞ்ச் போன் சந்தையில் மாஸ் ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

Vivo நிறுவனத்தின் இந்த V29e மாடல் போனில் 3டி கர்வ்ட் ஸ்கிரீனுடன், 6.78-இன்ச் Full HD+ (2400x1080) பிக்சல் கர்வ்ட் அமோல்ட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் Android FunTouchOS 13 அடிப்படையில் இயங்குகிறது.
மிகவும் ஸ்லிம்மான 7.5 mm தடிமனை மட்டுமே கொண்டுள்ளது. அதிலும் இந்த போனின் மொத்த எடை வெறும் 180 கிராம் தான். இதன் காரணமாக இதனை பயன்படுத்துவதற்கும் மிகவும் சௌகரியமான ஒரு உணர்வை கொடுக்கிறது. மேலும் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vivo V29e மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 44W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. Vivo V29e மொபைலில் 8GB ரேம் உடன் Qualcomm Snapdragon 695 SoC ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போனின் ரேமை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு விர்ச்சுவல் ரேம் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
Vivo V29eல் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) சப்போர்ட் கொண்ட 64 மெகா பிக்ஸல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 50 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்கான பெஸ்ட் ஆப்ஷனாக இந்த போன் இருக்கும். வீடியோகால் அழைப்புகளிலும் உங்கள் முகம் செம கிளாரிட்டியுடன் இருக்கும்.

Vivo V29e மாடல் போன், ஆர்டிஸ்டிக் ரெட் (Artistic Red) மற்றும் ஆர்டிஸ்டிக் ப்ளூ (Artistic Blue) ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது. Vivo V29e 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.26,999 க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ரூ.28,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த மாடலை ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதைத் தவிர விவோவின் பார்ட்னர் ரீட்டெயில் ஸ்டோர்களிலும் நேரடியாகச் சென்று வாடிக்கையாளர்கள் இதனை வாங்கலாம். ஃப்ளிப்கார்ட் இணையதளம் மூலமாக ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்பவர்களுக்கு எஸ்பிஐ, எஸ்டிபி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications