குளிர்காலத்தில் பெரிய பிரச்சனையே இதான்.. லஞ்ச்சை சுடச் சுட சாப்பிடணுமா? இதோ இருக்கே செம ஐடியா!
சென்னை: குளிர் காலத்தில் நாம் அனுபவிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். காலையில் அலுவலகத்திற்கு கொண்டு போகும் உணவு குளிர்ந்து போய் விடுவதை தவிர்த்து, சூடாக சாப்பிட உதவும் கேட்ஜெட் இங்கே!
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. மழைக்காலம் என்பதால், இரவு நேரங்களில் மட்டுமல்லாது, காலை, பகல் என எந்த நேரத்திலும் பெரும்பாலும் மழை வரும் சூழலே இருக்கிறது. ஜனவரி மாத இறுதி வரை, நமக்கு குளிர், பனி அதிகமாகவே இருக்கும். குளிர்காலம் என்பதால் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லும் அனைவருக்கும், காலை எழுவதற்கும் கிளம்பிச் செல்வதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

குறிப்பாக, அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை, பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ கொண்டு செல்லும் உணவு மிகவும் குளிர்ந்து 'ஜில்' என்றாகிவிடுவது. மதிய உணவை எவர்சில்வர் டிபன் பாக்ஸ், டப்பர்வேர் போன்ற பாத்திரங்களில் எடுத்து செல்லும்போது அது மதிய வேளைகளில் சாப்பிடும்போது மிகவும் குளிர்ச்சியாக மாறிவிடும்.
மதியம் சாப்பிடும் வேளையில் உணவு மிகவும் குளிர்ந்துவிடும் என்பதால், உணவின் சுவையே மாறி பலராலும் சாப்பிட இயலாது. குளிர் காலத்தில் சுடச் சுட உணவை சாப்பிடவே பலரும் விரும்புவார்கள். உணவு மிகவும் குளிர்ந்துவிட்டால் அதனை சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு, எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் இருந்து கல்லூரி அல்லது அலுவலகங்களுக்கு அல்லது வெளியில் எங்காவது செல்லும்போது உணவு எடுத்துச் செல்பவர்கள் இந்த எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்களை பயன்படுத்தலாம். உங்களின் உணவை எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸில் வைத்துக்கொண்டால், அவற்றை சில நிமிடங்களிலேயே சூடாக்கி விடலாம்.

எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள வொயரை உங்கள் அலுவலகத்தில் உள்ள மின்சார பிளக் பாயிண்ட் அல்லது, கார் அடாப்டரில் செருகி, அதன் மூலம் சில நிமிடங்களில் உங்களது உணவைச் சூடாக்கிக் கொள்ளலாம். ஆவி பறக்க ரசித்து ருசித்துச் சாப்பிடலாம்.
ரூபாய் 1000 விலையில் முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. பிரபலமான பிராண்டுகளான மில்டன், பிரெஸ்டீஜ், செல்லோ மற்றும் ஹேவல்ஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இரண்டு பாக்ஸ், 3 பாக்ஸ் என உங்களுக்கு ஏற்ற அளவில் வாங்கிக் கொள்ளலாம்.
ரூபாய் 800ல் தொடங்கி, பல்வேறு விலைகளில் எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்கள் விற்பனைக்கு உள்ளன. Cello நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ்கள் ரூ.1000 ரூபாய் முதல் கிடைக்கிறது. Milton நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லஞ்ச் பாக்ஸ் ரூ.1200 என்ற விலையில் கிடைக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications