அதிரிபுதிரி BSNL.. 500+ டிவி சேனல்கள் + ஓடிடி.. இலவசமாக பார்க்கலாம்.. எக்ஸ்ட்ரா டேட்டாவே தேவையில்லை!
சென்னை: பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான செய்தியை வழங்கியுள்ளது. கேபிள் டிவி அல்லது செட் டாப் பாக்ஸ் இன்றி, 500+ டிவி சேனல்கள் மற்றும் OTT தளங்களுடன் இலவச சேவையை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம் என அறிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். இதற்கு டேட்டா கழிக்கப்படாது.
மத்திய அரசு நடத்தி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், அண்மைக்காலமாக மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்களின் பிளான்கள் விலை உயர்வுக்குப் பிறகு பெரும்பாலான மக்களின் கவனம் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பியுள்ளது.

BSNL நாட்டின் முதல் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையைத் தொடங்கியுள்ளது, இது IFTV என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் சில பகுதிகளில் கிடைக்கிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) சந்தாதாரர்களுக்காக BSNL புதிய லோகோவுடன் ஆறு புதிய சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சேவைகளுடன் IFTV யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் இலவசமாக 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்க முடியும். செட்டாப் பாக்ஸ், போன் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், செட்டாப் பாக்ஸ் போன் கருவி வழங்கப்படும். அதை தொலைக்காட்சியில் இணைத்து, பிஎஸ்என்எல் வழங்கும் செயலியை பதிவிறக்கம் செய்து, தொலைக்காட்சியில் நிறுவ வேண்டும்.
அதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி தொலைக்காட்சிகளை இலவசமாக பார்க்க முடியும். முதற்கட்டமாக கட்டண சேனல்களையும் இலவசமாக பார்க்க முடியும். இவ்வாறு பார்க்கும்போது வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள டேட்டாவின் அளவு குறையாது. டிவி ஸ்ட்ரீமிங்கிற்குப் பயன்படுத்தப்படும் டேட்டா, FTTH பேக்கிலிருந்து கழிக்கப்படாது. அதாவது இது ஸ்ட்ரீமிங்கிற்கு அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், பிஎஸ்என்எல் புதிய IFTV சேவைகளை மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் சிறந்த ஸ்ட்ரீமிங் தரத்துடன் 500க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் பே டிவி கண்டெண்ட்களை அனுபவிக்கலாம். அனைத்து BSNL FTTH சந்தாதாரர்களும் இந்த பிரத்யேக சேவையை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி அனுபவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை தொடர்பாக, பிஎஸ்என்எல் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தமிழில் உள்ள பிரபல கட்டண தொலைக்காட்சிகளின் லோகோக்களும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications