இதுல BSNL-க்கு கிட்டயே நிற்க முடியாது.. 600 GB டேட்டா.. ஒரு வருடத்துக்கு ஃப்ரீ! அள்ளித் தரும் ஆஃபர்!
சென்னை: பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு மிக மலிவான விலையில் சூப்பரான பிளானை வழங்குகிறது. ஓர் ஆண்டு முழுவதும் கவலை இன்றி அன்லிமிட்டட் கால்ஸ், 600 ஜிபி டேட்டா பலன்களை அனுபவிக்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஓர் ஆண்டு வேலிடிட்டி வழங்கும் ரூ,1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள். வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS பலன்கள் வழங்கப்படுகிறது.

BSNL ரூ.1,999 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்
BSNL வழங்கும் ரூ,1,999 பிளானில் மொத்தம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்த பிறகும், யூசர்கள் தொடர்ந்து 40 Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். காலிங், மெசேஜ், UPI சேவை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். யூசர்கள் வைஃபை நெட்வொர்க் அல்லாத பகுதிகளில் இருக்கும்போது இந்த பிளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தினசரி அல்லது மாதாந்திர லிமிட் இல்லாமல் எவ்வளவு கால் வேண்டுமானாலும் பேசலாம். மேலும், பிஎஸ்என்எல் யூசர்கள் தினமும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
இந்த திட்டத்தில், இலவச காலர் டியூன் சேவை மற்றும் ஜிங் ஆப்க்கான அக்சஸ் போன்ற சில கூடுதல் நன்மைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
யாருக்கு பலன்?
ஒட்டுமொத்தமாக இந்த திட்டம் நீண்ட வேலிடிட்டி மற்றும் குறைந்த பட்ஜெட்டில் தேவையான அனைத்து வசதிகளையும் விரும்புவோருக்கு மிகவும் சூப்பரான டீல். குறிப்பாக செகண்டரி சிம் ஆக BSNL நெட்வொர்க்கை வைத்திருப்பவர்கள் அல்லது கிராமப்புறங்களில் உள்ள பயனர்களுக்கு, இந்த திட்டம் சிறந்த சாய்ஸ்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூலையில் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய போதிலும், பிஎஸ்என்எல் பழைய கட்டணங்களிலேயே பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டங்களை தொடர்ந்து வழங்கி வந்தது. இதன் விளைவாக, பிஎஸ்என்எல் சமீபத்திய மாதங்களில் 50 லட்சத்திற்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications