பட்ஜெட்ல பட்டாசா லேட்டஸ்ட் 5G போன் வாங்கலாம்.. ரூ.15,000ற்குள் செம ஸ்மார்ட் போன்கள்.. இதோ லிஸ்ட்!
சென்னை: ஸ்மார்ட் போன் யூசர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப டெக் சந்தையில் புதிது புதிதாக மாடல்கள் களமிறங்கி வருகின்றன. அந்தவகையில், இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், 5ஜி போன்களின் வருகை அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட் போன் வாங்க வேண்டுமா? இந்த லிஸ்ட்டை பாருங்க!
இந்தியாவில், நல்ல கேமரா மற்றும் பேட்டரி அம்சங்களோடு, குறைந்த விலையில் அதாவது ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் பெஸ்ட்டான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்5 5ஜி (Poco X5 5G): ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்கும் இந்த போக்கோ எக்ஸ் 5 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67" அங்குல தொடுதிரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 5000mAh பேட்டரி திறன், 48 MP + 8 MP + 2 MP பின்புற கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன. இதன் விலை தற்போது ரூ.14,999ஆக உள்ளது.

ரியல்மீ 9i 5ஜி (Realme 9i 5G): ஸ்கிரீன் 6.6 இன்ச், 4ஜிபி ரேம், 64 ஜிபி இண்டர்னல் மெமரி உடன் 5000 mAh பேட்டரியுடன் 5ஜி போனை அறிமுகப்படுத்தியுள்ளது ரியல்மீ. மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் பிராசசர் உள்ளது. 50 MP + 2 MP + 2MP என டிரிபிள் கேமராவுடன் வரும் இந்த போனில் கேமரா குவாலிட்டி பெட்டராக உள்ளது. முன்புற கேமரா 8 MP உள்ளது. ஸ்கிரீன் 6.58" இன்ச். இந்த மாடலின் விலை ரூ.14,999.

iQOO Z6 lite 5ஜி (iQOO Z6 lite 5G): ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசசர் உடன் வருகிறது iQOO Z6 lite 5ஜி மாடல். 4ஜிபி ரேம், 64 ஜிபி இண்டர்னல் மெமரி 5000 mAh பேட்டரி என ரியல்மீ 9i 5ஜி மாடலில் உள்ள அம்சங்கள் அப்படியே இந்த மாடலில் இருக்கின்றன. பின்புற கேமரா 50 MP + 2 MP, முன்புற கேமரா 8 MP என்பதும் கிட்டத்தட்ட ரியல்மீ மாடல் போலவே உள்ளது. ஸ்கிரீன் 6.58" இன்ச். விலை ரூ.13,999 என்ற அளவில் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி (Infinix Note 30 5G): இன்பினிக்ஸ் கம்பெனியின் இந்த ஸ்மார்ட்போனில் 6.78" இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 108 MP+ 2 MP என இரண்டு பின்புற கேமராக்கள், டைமென்சிட்டி 6080 சிப்செட், நீடித்த பேட்டரி அனுபவத்திற்கு 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.14,999 ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G 2023): இன்பினிக்ஸ் போனில் 6.7.8" இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 50 MP + 2 MP + 2 MP என ட்ரிபிள் ரியர் கேமராக்கள், டைமென்சிட்டி 920 சிப்செட், திறன்வாய்ந்த 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.14,999 ஆக உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications