ரூ.200ஐ விட கம்மி! "சாம்பியன்ஸ் டிராபி+ ஐபிஎல்!" ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்த ஜியோ! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது நடந்து வரும் சூழலில், இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் போட்டிகளை மொபைலில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பார்க்க ஜியோ புதிதாக ஒரு பேக்கை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 200க்கு குறைவான அந்த பேக்கில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் என இரண்டையும் தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்.

நமது நாட்டில் கடந்த சில காலமாகவே ஓடிடி பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை ஓடிடியில் பார்க்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Champions Trophy 2025 technology Cricket 2025

கேபிள் அல்லது டிடிஹெஃச் என்றால் வீட்டில் தான் பார்க்க முடியும். ஆனால், ஓடிடி என்றால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். இதனால் ஓடிடியில் கிரிக்கெட் பார்க்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

ஜியோ ஹாட்ஸ்டார்

இத்தனை காலம் ஜியோ சினிமாஸில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகின. இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும், ஜியோ சினிமாஸ் ஒரே தளமாக இணைந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் தளம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளும் சரி, ஐபிஎல் போட்டிகளும் சரி இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலேயே ஒளிபரப்பப்படுகிறது.

ரூ.200க்கும் குறைவு

ஜியோ ஹாட்ஸ்டார் இப்போது சாம்பியன்ஸ் டிராபியை இலவசமாகப் பார்க்கலாம் என்ற போதிலும் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க சப்ஸ்கிரைப் செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து இதுவரை தெளிவான அறிவிப்புகள் இல்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே ஜியோ நிறுவனம் வெறும் ரூ 200க்கு குறைவாக ஒரு புதிய பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதை வைத்து நீங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நல்ல குவாலிட்டியில் பார்க்கலாம் ஐபிஎல் தொடரையும் பார்க்கலாம்.

அதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டியை சப்ஸ்கிரிப்ஷன் இல்லாமலும் பார்க்கலாம் என்ற போதிலும், அதிகபட்ச குவாலிட்டி 360p ஆக மட்டுமே இருக்கும். இப்போது வரும் மொபைல்களில் 360p போட்டியை பார்த்தால் மோசமாகவே இருக்கும். அதேநேரம் மொபைல் பேக் உடன் பார்க்கும் போது 720pகளில் கூட போட்டிகளைப் பார்க்கலாம். இது கிரிக்கெட் போட்டிகளைக் காணும் அனுபவத்தை மேம்படுத்தும். இந்த கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஒரு ட்விஸ்ட்

இந்த பிளானில் வெறும் ரூ.195க்கு ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதில் நமக்கு 90 நாட்களுக்குச் சேர்த்து 15 ஜிபி டேட்டா கிடைக்கும். அதை விட முக்கியமாக 90 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் நமக்குக் கிடைக்கும். இதில் ட்விட்ஸ்ட் என்னவென்றால் இது டேட்டா ஒன்லி பேக் ஆகும். அதாவது இதில் வாய்ஸ் கால் அல்லது எஸ்எம்எஸ் எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கூட பார்க்கலாம்

இதே 90 நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பேக்கை தனியாக நாம் போட ரூ.149 தர வேண்டும். அத்துடன் வெறும் ரூ.45 கூடுதலாகக் கொடுத்தால் நமக்கு 15 ஜிபி டேட்டாவும் இலவசமாகக் கிடைக்கிறது. 3 மாத வேலிடிட்டி இருப்பதால் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவும் கூட இது நமக்கு உதவும். எனவே, நல்ல குவாலிட்டியில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வேண்டும் என நினைப்போருக்கு இந்த பேக் ஏற்றதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+