இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க.. உங்க ஐபோன் மொபைலையே எரித்துவிடுமாம்.. பரபர வார்னிங்.. என்ன மேட்டர்
வாஷிங்டன்: ஆப்பிள் ஐபோன் 15 மீதான மோகம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஒரு விஷயத்தைச் செய்தால் ஐபோன் மொத்தமாக நாசமாகும் என்று ஆப்பிள் விற்பனையாளர் ஒருவர் வார்னிங் கொடுத்துள்ளார்.
என்னதான் பல மொபைல் நிறுவனங்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு மொபைல் விட்டாலும், ஐபோன்களுக்கு இருக்கும் மவுசு எப்போதுமே இருக்கிறது. ஐபோன் 1 வெளியான போதும் சரி இப்போது ஐபோன் 15 வெளியான போதும் சரி அதை வரிசையில் நின்று வாங்க மக்கள் ரெடியாகவே இருக்கிறார்கள்.

இந்தாண்டு ஐபோன் 15 மாடல்கள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த ஆப்பிள் 'வொண்டர்லஸ்ட்' என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கம் போல இந்தாண்டும் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max என நான்கு மாடல்கள் வெளியானது.
ஐபோன்கள்: அட்டகாசமான கலர்கள், கலக்கல் கேமராகாக்கள் என பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இந்த ஐபோன் வெளியாகி இருக்கிறது. இது அனைத்தையும் தாண்டி ஐபோனில் அனைத்து மாடல்களிலும் இடம்பெற்ற மாற்றம் என்றால் அது டைப்-சி தான். வழக்கமாக ஐபோன்களில் சார்ஜ் செய்ய லைட்டிங் போர்ட் என்ற ஆப்பிளின் பிரத்தியேக போர்ட் தான் இருக்கும். ஆனால், இந்த முறை தான் முதல்முறையாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்களை பயன்படுத்தி உள்ளனர்.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் என்ன தான் 1008 விளக்கங்களைக் கொடுத்தாலும் உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவு காரணமாகவே அதில் டைப் சி போர்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து மொபைல்களிலும் டைப் சி சார்ஜிங் போர்ட் இருக்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர். 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மார்கெட் முக்கியம் என்பதால் ஐபோன் இந்த முடிவை எடுத்துள்ளது.
டைப் சி சார்ஜிங்: அதன்படி இப்போது ஐபோன்களில் டைப் சி சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. இனிமேல் வெளியே சென்றால் சார்ஜ் போட அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டிராய்டு மொபைல் சார்ஜர்களையே பயன்படுத்தலாம் என்றே நினைத்தனர். ஆனால், தயவு செய்து ஆண்ட்ராய்டு சார்ஜர்கள் மூலம் சார்ஜ் போட வேண்டாம் என்று ஆப்பிள் விற்பனையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை: சீனாவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் விற்பனையாளர் ஐபோன்களில் ஆண்ட்ராய்டு டைப்-சி கேபிளைப் பயன்படுத்தி சார்ஜ் போட வேண்டாம் என அலர்ட் செய்துள்ளார். அங்குள்ள ஆப்பிள் ஸ்டோர் ஒன்றும் ஆண்டிராய்டு டைப்-சி சார்ஜிங் கேபிளை ஆப்பிள் மொபைல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
அதையும் மீறி உரிய தரம் இல்லாத சார்ஜர்களை பயன்படுத்தும் போது அது ஐபோன்களை பாதிக்குமாம். குறிப்பாக ஐபோன்களில் உள்ளே இருக்கும் மதர்போர்ட் உள்ளிட்டவற்றை எரித்துவிடவே கூட வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கிறார்கள்.
ஆப்பிள்: இதுபோல எங்கு நடந்துள்ளது என்று எந்தவொரு தகவலையும் அவர்கள் பகிரவில்லை. வெறுமென ஆண்ட்ராய்டு டைப்-சி கேபிளை பயன்படுத்தினால் ஐபோன் எரியும் வாய்ப்பு உள்ளது என்று மட்டுமே எச்சரிக்கிறார்கள். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் சார்பில் இதுபோல எந்தவொரு அலர்ட்டும் வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் சாதாரண டைப் சி சார்ஜர்களை பயன்படுத்தியே ஐபோன்களை சார்ஜ் செய்யலாம் என்றே ஆப்பிள் தனது சப்போர்ட் பக்கத்தில் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications