"டீப்சீக்" உலகமே உச்சரிக்கும் வார்த்தை இதுதான்! அமெரிக்காவின் கோட்டையை ஒரே நொடியில் காலி செய்த சீனா
பெய்ஜிங்: இந்த காலத்தில் உலகெங்கும் ஏஐ மாடல்கள் தான் உலகெங்கும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போது வரை அமெரிக்க நிறுவனங்கள் தான் இந்த ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், அதை முறியடிக்கும் வகையில் டீப்சீக் என்ற ஏஐ மாடலை சீன நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இது ஏஐ உலகையே மொத்தமாகப் புரட்டிப்போடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலத்தில் ஒட்டுமொத்த உலகிலும் ஏஐ தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகில் அடுத்தகட்ட வளர்ச்சி ஏஐ நோக்கியே இருக்கும் என்றே பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

தற்போது வரை இந்த ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி என்று அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ துறையைத் தன்வசமாக்கி உள்ளது.
டீப்சீக்:
ஆனால், அதை முறியடிக்கும் வகையில், சீனா இப்போது தனது டீப்சீக் (DeepSeek) ஏஐ மாடலை வெளியிட்டுள்ளது. சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023ஆம் ஆண்டில் டீப்சீக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தான் இப்போது ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்று இரு மாடல்களாக வெளியிட்டுள்ளது.. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பதை அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. மேலும், இப்போது யூசர்களால் R1 மாடலை மட்டுமே பயன்படுத்த முடியும்.
தற்போதுள்ள தகவல்களை வைத்துப் பார்த்தோம் என்றால் ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல். அதேநேரம் ஆர்1 ஜீரோ என்பது முழுக்க முழுக்க தானாகவே கற்பித்துக் கொண்ட (self-taught) ஏஐ மாடலாகும். சீனா உருவாக்கியுள்ள இந்த டீப்சீக் ஏஐ சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மாடல்களுக்கு சவால் விடுபவையாகவே உள்ளது.
இலவசம்:
இந்த காலத்தில் ஏகப்பட்ட ஏஐ மாடல்கள் உள்ளன. அப்படியிருக்கும் போது இந்த டீப்சீக் மாடல் மட்டும் ஏன் பேசுபொருள் ஆனது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது முழுக்க முழுக்க இலவசமானது என்பதே இதற்குப் பிரதான காரணமாகும். இதேபோன்ற அதிநவீன மேம்பட்ட வசதிகளை சாட்ஜிபிடி-இல் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நாம் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த டீப்சீக் ஏஐ மாடல் முழுக்க முழுக்க இலவசம். இதைப் பயன்படுத்த நாம் ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை.
சாட்ஜிபிடி மற்றும் ஜெமனி ஏஐ மாடல்களில் இலவச வசதி உள்ளன. ஆனால், பழைய வெர்ஷன்களை மட்டுமே நம்மால் இலவசமாகப் பயன்படுத்த முடியும். புதிய வெர்ஷன்களை பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் ஏஐ மாடலுக்கு இதுபோல எந்தவொரு வரம்பும் இல்லை. முழுக்க முழுக்க இலவசம். அதுவும் அதிநவீன வசதிகள் அனைத்துமே இலவசமாகும்.
அலறும் அமெரிக்க நிறுவனங்கள்:
மேலும், இதை இயக்கவும் கூட குறைந்த அளவே செலவாகுமாம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 லட்சம் இன்புட் டோக்கன்களுக்கு சுமார் $15 செலவாகும். ஆனால், அதே 10 லட்சம் இன்புட் டோக்கன்களுக்கு டீப்சீக் மாடலில் வெறும் $0.55 மட்டுமே செலவாகும். அதாவது ஓபன் ஏஐ மாடலை காட்டிலும் டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது. இவ்வளவு குறைந்த செலவில் அதான் ஓபன் ஏஐ மாடலை மிஞ்சும் அளவுக்குச் செயல்திறனையும் கூட அடைய முடிகிறது என்பதே தனிச்சிறப்பாகும்.
இது முக்கியம்:
அதேபோல இந்த டீப்சீக் என்பது ஒரு ஓபன் சோர்ஸ் ஏஐ டூல் ஆகும்.. இதுவே டீப்சீக்கை மற்ற ஏஐ டூல்களில் இருந்த தனித்துக் காட்டுகிறது. சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட் சோர்ஸ் ஏஐ மாடலாகும். அதில் என்ன மாதிரியான கம்யூட்டர் கோட்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த டீப்சீக் ஏஐ என்பது ஓபன் சோர்ஸ். இதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications