என்னப்பா போகலாமா? ஐபோன் 16 வாங்க ரெடியா! இந்த கார்டுகள் இருந்தால் ஆஃபர் உண்டு! அசத்தல் செய்தி!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன் ஸ்மார்ட் போன்கள், ஏர் பாட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விற்பனை துவங்கி இருக்கும் நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து ஐபோன்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஏர் பாட்ஸ், வாட்ச் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய ஆப்பிள், இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் அதிகாரப்பூர்வ விற்பனையை தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 2வது வாரத்தில் இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில்ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஆப்பிள் ஸ்டோர்களை ஆப்பிள் தொடங்கியது, இந்த நிலையில் நேற்று விற்பனை தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் வாசலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு விருப்பமான ஆப்பிள் ஐபோன்களை வாங்கி சென்றனர்.
ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களின் விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிய நிலையில் பலர் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர். தொடர்ந்து விற்பனை தொடங்கியதும் மும்பையைச் சேர்ந்த உஜ்வால் ஷா என்பவர் இந்தியாவின் முதல் ஐபோன் 16 சீரிஸ் மாடலை வாங்கிச் சென்றார்.
விலையைப் பொறுத்தவரை ஐபோன் 16 ரூ.79,900க்கும், ஐபோன் 16 ப்ளஸ் ரூ.89,900க்கும், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 9ம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், நேற்று முதல் விற்பனை தொடங்கப்படுகிறது. நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான யூனிட்கள் இந்தியாவில் விற்றுள்ளன. பலர் ப்ரீ ஆர்டர் கொடுத்து தங்கள் யூனிட்களுக்காக காத்துள்ளனர்.
டெசர்ட் டைடானியம், நேட்சுரல் டைடானியம், வெள்ளை டைடானியம், கருப்பு டைடானியம் ஆகிய புதிய நிறங்களில் ஐபோன் 16 விற்பனைக்கு கிடைக்கும் நிலையில், பலரும் அப்கிரேட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் விற்பனையை அதிகப்படுத்த, ஆப்பிள் பல சலுகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் 16 ஐபோன்களின் விலை சற்று அதிகமாக இருப்பதாக இருந்தாலும், ஆப்பிள் விரும்பிகள் தொடர்ந்து அந்த ஃபோன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐபோன் 16 சீரியஸில் எந்த மாடல் போனை வாங்கினாலும் உடனடியாக 5000 ரூபாய் ஆஃபர் கிடைக்கிறது. இது அனைவருக்கும் கிடையாது. ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபர்களை உடனடியாக பெறலாம். இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா இஎம்ஐ மூலமும், கூடுதல் இஎம்ஐ களுக்கு வட்டியுடனும் வாங்க முடியும். அதே நேரத்தில் ஏற்கனவே ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 67,000 ரூபாய் வரையிலான எக்சேஞ்ச் மூலம் புதிய ஆப்பிள் 16 க்கு மாறிக் கொள்ளலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications