ஆப்பிள் ஐபோன் 13 விலை இத்தனை சீப்பாக கிடைக்கிறதா? அதிரடி ஆஃபர்! போனா வராது.. பொழுது போனா கிடைக்காது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் ரூ 69,900 க்கு கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 13 விலை சலுகை விலைக்கு கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா?

மைக்ரோசாப்ட்டின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் போன்களுக்கு என்றுமே டிமான்ட் அதிகம்தான். பெரும்பாலானோர் இந்த ஆப்பிள் போனை வைத்துள்ளார்கள். அது போல் ஐபாடும் கிடைக்கிறது. லேப்டாப்பையும் தயாரிக்கிறார்கள்.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் என்பதால் இந்த போனை அதிக விலையாக இருந்தாலும் மக்கள் வாங்கி விடுகிறார்கள். இந்த ஆப்பிள் 13 ஐபோனின் டிஸ்பிளே 15 செ.மீ. கொண்டது.

இதில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சில நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. 12 எம்பி பிக்ஸல் கொண்ட பிரண்ட் கேமரா உள்ளது. மொத்தம் 3 கேமராக்கள் உள்ளன. இதில் ஏ15 பனோனிக் சிப் பிராசஸர் உள்ளது. பேட்டரியும் நன்கு நீடித்து உழைக்கும்.
இதில் எக்ஸ்டிஆர் டிஸ்பிளே உள்ளதால் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Do you know the price of Apple Iphone 13 model in an offer?

இரு சிம்கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். டால்பி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் iOS 15 எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.128 ஜிபி வரை போனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். எச்டி ரெக்கார்டிங் செய்யும் வசதி உள்ளது. 4கே வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம்.

5 மடங்கு பெரிதுப்படுத்தினாலும் புகைப்படங்கள் துல்லியமாக இருக்கும். ப்ளூடூத், வைஃபை வசதிகள் உள்ளன. நானோ சிம் பயன்படுத்த வேண்டும். போன் எங்கே இருக்கிறது என்பதை டிராக் செய்யும் வசதியும் உள்ளது. இதன் எடை 173 கிராம் ஆகும். இந்த போன் இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் 69,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆனால் பிளிப்கார்ட்டில் வாங்கினால் 11,901 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த ஆபர் எத்தனை நாட்களுக்கு எப்போது முடியும் என தெரியவில்லை. இந்த ஆபரின் படி ரூ 57,999 க்கு ஆப்பிள் ஐபோன் 13 கிடைக்கும். இது 5 ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும். தற்போது ஐபோன் 15 இன்னும் 2 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனவே ஆப்பிள் ஐபோன் 13 ஐ வாங்கலாமா இல்லை இனி புதிதாக வர போகும் ஐபோன் 15 மாடலை வாங்கலாமா என்ற யோசனையில் உள்ளனர். ஐபோன் 15 ஐ பொருத்தமட்டில் மேம்படுத்தப்பட்ட கேமரா வரும். முன்பக்க டிசைன், பின்பக்கத்தின் ஃபினிஷிங் எல்லாமே பக்காவாக இருக்கும். ஆனால் எப்போது வருகிறது என்பது தெரியவில்லை.

அந்த ஐபோன் 15 விலை அதிகமாக இருக்கும். ஐபோன் 14 போல் ரூ 80 ஆயிரத்திற்கு விற்கப்படலாம் என்கிறார்கள். உங்களுடைய பட்ஜெட் பிரச்சினை இல்லை என்றால் ஐபோன் 15 க்கு காத்திருக்கலாம் என்றும் இல்லாவிட்டால் ஐபோன் 13 ஐ வாங்கலாம் என்றும் செல்போன் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள். ஐபோன் 13க்கு பிளிப்கார்ட்டில் வாங்கும் போது சார்ஜர் கிடைக்காதாம். வெளியே வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அதற்கு எதுக்கு 58 ஆயிரம் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+