பொது Wi-fi யூஸ் பண்றீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க! மத்திய அரசு விடுக்கும் முக்கிய அலர்ட்!
டெல்லி: பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலவச வைஃபை மூலம் பேமெண்ட் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது ஆபத்து என எச்சரித்துள்ளது மத்திய அரசு.
இன்றைய டெக்னாலஜி உலகில், பயணத்தின்போது கூட இணைய அணுகல் இருப்பது பல பணிகளுக்கு மிக முக்கியமானது. அதிர்ஷ்டவசமாக, பல இடங்களிலும் நமக்கு தற்போது இலவச வைஃபை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கின்றன. விமான நிலையம், கஃபே மற்றும் மால் உள்ளிட்ட பல இடங்களில் இலவச வைஃபை கனெக்ஷன் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலானோர் இவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றுக்கு பின்னாலேயே ஆபத்தும் இருக்கிறது.

பொது வைஃபை
இலவச பொது வைஃபை நமக்கு மிகவும் வசதியாகத் தோன்றலாம். ஆனால், பல பொது வைஃபை நெட்வொர்க்குகள் பாதுகாப்பானவை அல்ல. இதனால் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் எளிதான இலக்காக மாற வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொது வைஃபை மூலம் இமெயில் பார்ப்பது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளில் லாகின் செய்வது எல்லாம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்குகளின் தரவுகள் களவாடப்பட்டு, பேங்க் பேலன்ஸ் கூட உங்களுக்கு தெரியாமலேயே திருடப்படும் வாய்ப்புகளும் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளது.
சைபர் கிரைம் ஆபத்து
பொது வைஃபை மூலம் நீங்கள் கனெக்ட் செய்து பயன்படுத்தும்போது, அந்த நெட்வொர்க் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் சைபர் குற்றவாளிகள் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைல் சாதனத்தை அணுகி உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைத் திருடலாம். இது டேட்டா திருட்டு மற்றும் பணம் இழப்புக்கு வழிவகுக்கும்.
பொது வைஃபை மூலம் வங்கி, ஆன்லைன் ஷாப்பிங் அல்லது எந்தவிதமான முக்கியமான செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In - Indian Computer Emergency Response Team) கூறியுள்ளது.
பிரைவசிக்கு ஆபத்து
பொது வைஃபை மூலம் இ-மெயில் சரிபார்ப்பது அல்லது சமூக ஊடகக் கணக்குகளில் உள்நுழைவதும் ஆபத்து. இதை கட்டாயம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் பொது வைஃபை பயன்படுத்தும்போது உங்களின் பாஸ்வேர்டு ஹேக்கர்களால் திருடப்படும். தனிப்பட்ட தகவல்களும் திருடப்படும்.
பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களை மேற்கொள்ள வேண்டாம். இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
CERT-In அறிவுரைகள்
CERT-In சில முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பகிர்ந்துள்ளது.
1. முன்பின் அறியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
2. அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் நீளமான வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்
3. நீண்ட காலம் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டாம்.என்று அறிவுறுத்தி உள்ளது.
4. பொது வைஃபை பயன்படுத்தும் சூழல் வந்தால் வெப் பிரவுசர்களில் ஆட்டோ ஃபில் ஆப்ஷனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
5. பொது நெட்வொர்க்குகளை அணுகும்போது பாதுகாப்பான VPN நெட்வொர்க்கை பயன்படுத்தவும்.
CERT-In என்பது என்ன?
CERT-In என்பது இந்தியாவில் சைபர் பாதுகாப்பிற்குப் பொறுப்பான தேசிய நிறுவனமாகும். இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்படி, சைபர் பாதுகாப்பு சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்கான தேசிய நோடல் நிறுவனமாக CERT-In செயல்படுகிறது. சைபர் குற்றங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், அவசர நடவடிக்கைகளை வழங்குதல் மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் பணிகளில் அடங்கும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications