போனில் எப்போ பார்த்தாலும் ஸ்டோரேஜ் இல்லைனே வருதா? ஈஸியான வழி தான்.. இதை மட்டும் பண்ணுங்க போதும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. போன் வாங்கிய கொஞ்ச நாளிலேயே அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை ஸ்டோரேஜ். கேமரா ஓப்பன் செய்தால் கூட ஸ்டோரேஜ் பிரச்சனையால் வொர்க் ஆகாது.. இந்த பிரச்சனையை எப்படி ஈஸியாக சமாளிப்பது?

இன்றைய டெக்னாலஜி யுகத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே யாரும் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அனைவரும் ஒவ்வொரு வகையில் போனை பயன்படுத்துகிறோம். ஆனால் அனைவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை ஒன்று உள்ளது.

Easy ways to solve insufficient storage available notification on smart phones

அதுதான் ஸ்டோரேஜ் பிராப்ளம். தற்போதைய காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மாடல்களில் மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் அளிக்கப்படுகிறது. ஆனால், 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என எவ்வளவு ஸ்டோரேஜ் கொடுத்தாலும், அது சில மாதங்களில் போதுமானதாக இருப்பதில்லை.

போனை தொடும் போதெல்லாம், 'ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ரன்னிங் அவுட்' என்பது போல வார்னிங் நோட்டிஃபிகேஷன்கள் போனில் வந்தபடி இருக்கும். அது மன உளைச்சலையும் ஏற்படுத்தும். உங்களது ஸ்மார்ட் போனில் தேவையற்ற ஃபைல்களை நீக்கி எவ்வாறு அதிக ஸ்டோரேஜை பெறுவது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Easy ways to solve insufficient storage available notification on smart phones

கேச்சி மெமரி : நாம் இண்டர்நெட்டில் தேடும் தகவல்கள், வலைதளங்களின் முகவரி ஆகியவை போனில் தற்காலிக ஃபைலாக சேவ் ஆகும். அதுவே கேச்சி மெமரி எனப்படுகிறது. இதை நீண்டகாலமாக க்ளீன் செய்யாமல் விட்டால், அதுவே மலை போலக் குவிந்து பல ஜிபி கணக்கில் இடத்தை அடைத்துவிடும்.

அதை நீக்கினால் ஓரளவுக்கு ஸ்டோரேஜ் அதிகரிக்கும். போனில் செட்டிங்ஸ் ஆப்சனுக்குள் ஸ்டோரேஜை க்ளிக் செய்யவும். அதில் மேனேஜ் ஸ்டோரேஜ் மற்றும் கேச்சி என்று இரு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் கேச்சியை தேர்வு செய்து க்ளியர் கொடுத்தால் மொத்தமாக கேச்சி க்ளீயர் செய்யப்படும்.

Easy ways to solve insufficient storage available notification on smart phones

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்களில் ஒவ்வொரு செயலியாக தனித்தனியாக கேச்சி நீக்கும் வகையில் உள்ளது. அதிகம் பிரவுஸ் செய்யும் தளங்களில் கேச்சி மெமரியை க்ளீயர் செய்து கொள்ளலாம். ஆப் இன்ஃபோவில் க்ளியர் டேட்டா என்ற ஆப்சனை க்ளிக் செய்துவிட்டால், ஆப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்துவிடும். கேச்சி மெமரியை மட்டும் அழிக்க வேண்டும்.

கூகுள் ஃபைல்ஸ் : கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் ஃபைல்ஸ் செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள ஜங்க் ஃபைல்ஸ் அனைத்தையும் நீக்கி மொபைல் போனின் ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ள முடியும்.

தற்காலிகமாக அழிக்கப்பட்டாலும், நீண்ட காலமாக ரீசைக்கிள் பின்னில் இருக்கும் புகைப்படங்கள், ஃபைல்களையும் மொத்தமாக நீக்கி அதிக ஸ்டோரேஜ் பெற முடியும். கூகுள் ஃபைல்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து ஜங்க் ஃபைல்ஸ் என்பதற்கு கீழே இருக்கும் கிளீன் என்ற பட்டனை அழுத்தினாலே கூகுள் ஃபைல்ஸ் மொத்தமாக சோலியை முடித்து விடும்.

கூகுள் போட்டோஸ் : அதிகமாக போட்டோ, வீடியோ எடுப்பவராக இருந்தால் அடிக்கடி போன் ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்படலாம். இதனை தவிர்க்க, கூகுள் போட்டோஸ் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உங்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Easy ways to solve insufficient storage available notification on smart phones

எந்த குவாலிட்டியில் உங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்ய வேண்டும் என்பதையும் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். வேண்டிய ஃபைல்களை பேக்கப் செய்த பின், "ஃப்ரீ அப் ஸ்பேஸ்" என்ற பட்டனை அழுத்தினால், பேக்கப் செய்யப்பட்ட அனைத்து போட்டோ மற்றும் வீடியோக்கள் மொபைல் மெமரியில் இருந்து நீக்கப்படும்.

இதனால், போன் ஸ்டோரேஜ் காலியாகி, உங்களுக்கு அதிக ஸ்டோரேஜ் கிடைக்கும். போனில் இல்லாவிட்டாலும் கூட உங்களால் கூகுள் போட்டோஸில் உங்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.

Easy ways to solve insufficient storage available notification on smart phones

வாட்ஸ் அப் சிக்கல் : நீங்கள் போட்டோ, வீடியோக்களை அதிகம் எடுக்காதவராக இருந்தாலும், உங்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் வரும் வீடியோக்கள் அதிக இடத்தை அடைத்து வைத்திருக்கலாம். வாட்ஸ் அப்பை திறந்து அதில் செட்டிங்ஸ் சென்று ஸ்டோரேஜ் அண்டு டேட்டா க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் மேனேஜ் ஸ்டோரேஜ் என்பதை தேர்வு செய்தால் வாட்ஸ் அப் எவ்வளவு ஸ்டோரேஜை ஆக்கிரமித்துள்ளது என்பது தெரியவரும். அதில் அதிக மெமரியை அடைத்துள்ள ஃபைல்களை கட்டம் கட்டி தூக்கி விடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+